ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. 6 அடி நிலமே சொந்தமடா? 42 வயதில் திடீர் மாரடைப்பு.. ஒரே பாடலில் புகழ்பெற்ற பிக்பாஸ் போட்டியாளர், நடிகை திடீர் மரணம்.. கண்ணீரில் ரசிகர்கள்..!

  காண்டா லாகா இசை வீடியோவின் மூலம் பிரபலமான நடிகையும், பிக்பாஸ் இந்தி போட்டியாளரும், மாடலுமான ஷெபாலி ஜரிவாலா நேற்று திடீரென காலமானார். இந்த செய்தி ஒட்டுமொத்த பொழுதுபோக்கு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷெபாலியை…

shefali

 

காண்டா லாகா இசை வீடியோவின் மூலம் பிரபலமான நடிகையும், பிக்பாஸ் இந்தி போட்டியாளரும், மாடலுமான ஷெபாலி ஜரிவாலா நேற்று திடீரென காலமானார். இந்த செய்தி ஒட்டுமொத்த பொழுதுபோக்கு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷெபாலியை அவரது கணவர், நடிகர் பராக் தியாகி மற்றும் மூன்று பேர் மும்பையில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். 42 வயதான ஷெபாலி, திடீர் மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2000-களின் முற்பகுதியில் வெளியான ’காண்டா லாகா’ ரீமிக்ஸ் வீடியோவில் ஷெபாலி ஜரிவாலா தோன்றி, ஒரே இரவில் அனைவராலும் அறியப்பட்டார். இந்த வீடியோ அவரது அடையாளமாக மாறி, அவருக்கு ‘காண்டா லாகா கேர்ள்’ என்ற பெயரை பெற்று தந்தது. இந்த வீடியோவில் அவரது அற்புதமான நடிப்பு அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு, அவர் பல இசை வீடியோக்கள், திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். சல்மான் கான் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ’முஜ்ஸே ஷாதி கரோகி’யில் நடித்ததுடன், ’நாச் பலியே’ மற்றும் ’பிக் பாஸ் 13’ போன்ற பிரபலமான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

ஷெபாலி கடந்ஹ பல ஆண்டுகளாக, மனநல விழிப்புணர்வு மற்றும் பெண்கள் அதிகாரமயமாக்கலுக்காகவும் குரல் கொடுத்து வந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை, பாப் கலாச்சார உலகில் நீங்கா பதிவை விட்டு சென்ற துடிப்பான, அஞ்சாத கலைஞர் என்று நினைவுகூருகின்றனர்.

ஷெபாலி 2014ஆம் ஆண்டு பராக் தியாகி என்பவரை திருமணம் செய்தார். இந்த ஜோடி சமூக ஊடகங்களில் அடிக்கடி ஒன்றாக காணப்பட்டது, மேலும் அவர்களது உறவு பலருக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தது.

நேற்று இரவு மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது பராக் தியாகி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். அவர் மருத்துவமனையிலிருந்து கண்ணீருடனும், மிகுந்த மன உளைச்சலுடனும் வெளியேறும் காட்சிகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களையும் நலம் விரும்புபவர்களையும் மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவரது நண்பர்கள், பராகின் முகத்தில் தெரிந்த துயரம் அவர் இழந்த பெரும் இழப்பை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டனர்.