அர்த்தமுள்ள இந்துமதம்: 241 பேர் கருகியும் கருகாத பகவத் கீதை புத்தகம்.. ஆச்சரிய வீடியோ..!

  அகமதாபாத் விமானத்தில் பயணம் செய்த 242 பேர்களில் 241 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வைத்திருந்த பகவத் கீதைக்கு மட்டும் எந்தவிதமான சேதமும் இல்லாமல் இருப்பது…

gita

 

அகமதாபாத் விமானத்தில் பயணம் செய்த 242 பேர்களில் 241 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வைத்திருந்த பகவத் கீதைக்கு மட்டும் எந்தவிதமான சேதமும் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஏர் இந்தியா விமானம் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீட்புப் பணியின்போது ஒருவர் பகவத் கீதை புத்தகத்தை எடுத்து, அதைத் திறந்து காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

242 பயணிகளில் பலர், உடலே அடையாளம் தெரியாத அளவுக்குத் தீக்காயம் அடைந்த நிலையில், பகவத் கீதை புத்தகத்தில் தீயால் ஏற்பட்ட ஒரு சின்ன பாதிப்பு கூட இல்லை என்றும், மேல் பகுதியில் மட்டும் சில சாம்பல் துகள்கள் இருந்ததாகவும் அந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. விபத்தில் எந்தப் பக்கமும் கிழியவோ அல்லது எரியவோ இல்லை என்றும், புத்தகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதும் அந்த வீடியோவில் இருந்து தெளிவாக தெரிகிறது.

இந்த வீடியோவுக்குச் சாதகமான மற்றும் பாதகமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பலர் இது ஸ்ரீ கிருஷ்ணரின் அற்புதம் என்றும், அர்த்தமுள்ள இந்து மதத்தின் அற்புதம் என்றும், “ஜெய் கிருஷ்ணா” என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர், பகவத் கீதை புத்தகத்தை காப்பாற்றிய கடவுள் 241 உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாமே?” என்று பதிவிட்டு வருகின்றனர். மொத்தத்தில் இந்த வீடியோ தற்போது சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது.

https://x.com/MeghUpdates/status/1933382579039633553