மெட்ரோவில் பெண் பயணிகளை ரகசியமாக வீடியோ எடுக்கும் கும்பல்.. சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சி..!

  இன்ஸ்டாகிராம் பக்கமான “Bangalore Metro Clicks” (@metro_chicks) என்ற பக்கத்தில் மற்றும் நம்ம பெங்களூரு எக்ஸ் பக்கத்தில் பெங்களூரு மெட்ரோவில் பெண் பயணிகளை கண்ணியமின்றி ரகசியமாக வீடியோ எடுத்து, அவர்களின் சம்மதமின்றி இணையத்தில்…

metro

 

இன்ஸ்டாகிராம் பக்கமான “Bangalore Metro Clicks” (@metro_chicks) என்ற பக்கத்தில் மற்றும் நம்ம பெங்களூரு எக்ஸ் பக்கத்தில் பெங்களூரு மெட்ரோவில் பெண் பயணிகளை கண்ணியமின்றி ரகசியமாக வீடியோ எடுத்து, அவர்களின் சம்மதமின்றி இணையத்தில் பதிவேற்றியிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

5,605 பின்தொடர்வோர்களை கொண்ட இந்த சமூக ஊடக கணக்கு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டெலிகிராம் சேனலில் 13 வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. இதில் சில வீடியோக்களில் “நம்ம மெட்ரோவில் அழகான பெண்களை கண்டுபிடிக்கிறோம்” போன்ற மோசமான தலைப்புகளும், பெண்களை ரகசியமாக பின்தொடர்ந்து படம்பிடிக்கும் காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோக்களில் கருத்துகள் பகிரும் வசதி முடக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பெரும் கவனத்தை பெற்றதற்கு காரணம், X தளத்தில் ஒரு பயனர் இந்த கணக்கு குறித்து பெங்களூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின், பல பயனர்கள் இந்தக் கணக்கின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் . X பயனராக உள்ள “That Nair Guy” (@surajv369) என்பவர், “பெண் பயணிகளை பயமுறுத்தும் செயல் எனக் கூறி, விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், X பயனர்கள் ஆதர்ஷ் கார்வி (@Adarshkharvi1), அபய் சதுர்வேதி (@AbhayLearner) ஆகியோரும் பெங்களூர் போலீசாரை குறிச்சிட்டு, “இந்தக் கொடிய நபரை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும்” எனக் கோரினர்.

இத்தகைய கணக்குக்கு இவ்வளவு பெரிய பின்தொடர்வோர் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது என பலரும் குறிப்பிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து பெங்களூர் மெட்ரோ ரயில்வே கழகத்தின் (BMRCL) தொடர்பாளர் பி.எல். யசவந்த் சவான், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் BMRCL இந்த கணக்கை பற்றி விசாரித்து வருவதாகவும், அந்த நபரின் மீது போலீசில் முறையிடப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அந்த கணக்கை நீக்க வலியுறுத்தும் வகையில் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். “எங்கள் பயணிகள் பாதுகாப்பை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் நாம் பொறுக்க மாட்டோம்” என்றும் சவான் வலியுறுத்தினார்.