டிரம்ப் பின்வாங்கல் எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை வரலாறு காணாத எழுச்சி.. இந்தியாவுக்கு மட்டும் சோகம்..!

  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரிகளை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்ததையடுத்து, உலக பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத எழுச்சியை…

share market

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரிகளை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்ததையடுத்து, உலக பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத எழுச்சியை கண்டுள்ளன.

டிரம்பின் அறிவிப்பால் உலகளாவிய சந்தையின் பற்றத்தை குறைக்கும் முயற்சியாகவும், வர்த்தகப் போர் தற்போது சீனாவுடன் மட்டுமே இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரி 125% ஆக உயர்ந்த நிலையில், மற்ற நாடுகளுக்கு வரி 10% ஆக குறைக்கப்பட்டு தற்காலிக சலுகை அளிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வால்ஸ்ட்ரீட்டில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பெரிய உயர்வை ஏற்படுத்தியது. S&P 500 குறியீடு 9.52% உயர்ந்து 474.13 புள்ளிகள் அதிகரித்து 5,456.90ல் முடிந்தது.

இந்த நேர்மறை அலை ஆசிய சந்தைகளுக்கும் பரவியுள்ளது. ஜப்பான் Nikkei குறியீடு 10% உயர்வுடன் திறக்கப்பட்டு, 7.38% உயர்வுடன் முடிந்தது. Topix குறியீடு 7.12% உயர்ந்தது. தென்கொரியாவின் Kospi 5.4% உயர்ந்தது; Kosdaq 4.61% உயர்ந்தது.

ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 யில் 7% உயர்வு என தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங் Hang Seng குறியீடு சிறிது தளர்வாக தொடங்கியாலும், சர்வதேச சந்தைப் போக்கின் நன்மை அதற்கும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Dow Jones 2,962.86 புள்ளிகள் (7.87%) உயர்ந்து 40,608.45 ஆக உயர்ந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த Nasdaq 12.16% (1,857.06 புள்ளிகள்) உயர்ந்து 17,124.97 ஆக உயர்ந்தது. இது 2001ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய எழுச்சி ஆகும்.

Russell 2000 குறியீடு 8.66% உயர்ந்தது. மார்ச் 2020க்குப் பிறகு அதனுடைய மிகப்பெரிய நாள் இன்று தான். அதேபோல் S&P 500யில் உள்ள அனைத்து 11 முக்கிய துறைகளும் உயர்ந்துள்ளது. தொழில்நுட்ப துறை 14.15% உயர்வுடன் முன்னிலையில் இருந்தது.

Nvidia 18.7% உயர்வும், Apple 15.3% உயர்வும் கண்டுள்ளது. S&P Auto Index வரலாற்றில் முதல்முறையாக 20.95% உயர்ந்தது. பாதுகாப்பு துறைகளான Utilities துறைகளும் 3.91% வளர்ச்சி கண்டன.

இந்திய பங்குச் சந்தை இன்று மஹாவீர் ஜெயந்தி காரணமாக மூடப்பட்டது. இருப்பினும், GIFT Nifty 3.40% உயர்ந்து 23,252.00 ஆக அடித்தது. இது இந்திய சந்தைகளும் உலக சந்தை எழுச்சியைத் தொடரும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. நாளை பங்குச்சந்தை தொடங்கும்போது இந்திய பங்குச்சந்தையிலும் மிகப்பெரிய எழுச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.