ஒரே ஒரு தக்காளியின் விலை ரூ.1300.. Resume எல்லாம் இருக்குதே.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!

  தக்காளி விலை மிகவும் சரிந்துள்ள நிலையில் ஒரு கிலோ ரூ. 20 மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. ஆனால் நெட்டிசன் ஒருவர் ஒரே ஒரு தக்காளியை 1300 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளேன்…

tomato

 

தக்காளி விலை மிகவும் சரிந்துள்ள நிலையில் ஒரு கிலோ ரூ. 20 மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. ஆனால் நெட்டிசன் ஒருவர் ஒரே ஒரு தக்காளியை 1300 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளேன் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

ஒரு தக்காளி 16 டாலர், அதாவது 1300 ரூபாய்க்கு வாங்கினேன். உங்களுக்கு இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இதில் ஒரு ஸ்பெஷல் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இது ஒரு விவசாய சந்தையில் வாங்கியதுதான். இந்த தக்காளி மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? காரணம், அதன் பாக்கெட் மேலே ஒரு நோட்டு ஒட்டி இருக்கின்றது. அதாவது அதுதான் தக்காளிக்கு Resume ஆகும்.

அந்த Resumeல் இந்த தக்காளி மூங்கில் கருவிகள் மூலம் வளர்த்தது என்றும், பாசிட்டிவ் எண்ணங்களை கொண்டு வளர்க்கப்பட்டது என்றும், இது ஒரு சிறப்பு வகையான மண்ணில் நடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எல்லாம் சேர்த்தே இது ஸ்பெஷல் தக்காளியாக உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின், அவர் அந்த தக்காளியை ருசித்து சாப்பிட்டு, “உண்மையாகவே இது 1300 ரூபாய்க்கு ஏற்றபடி சுவைக்கின்றதா?” என்றால், அது கேள்விக்குறிதான் என்று தெரிவித்துள்ளார். “இந்த விலைக்கு வாங்கியதில் எனக்கு திருப்தி இல்லை” என்றும், “ஆனால் அதே நேரத்தில் இந்த Resumeக்காகவே இதை வாங்கினேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அவருடைய இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். “தக்காளிக்கூட Resume இருக்குதா! பரவாயில்லை, நான் இந்த தக்காளி மாதிரி வாழ்க்கை வாழனும்” என்று ஒருவர் பதிவு செய்துள்ளார்.

“இந்த தக்காளியைப் போல லைப் இருக்கனும். இந்த விவசாய நிலத்துக்கு விஐபி ட்ரீட்மென்ட் கொடுக்க தகுதியானது” என்றும் பதிவுகள் வருகின்றன.

மொத்தத்தில், இந்த தக்காளி 1300 ரூபாய் கொடுத்து வாங்கியவருக்கு எந்த ஸ்பெஷலும் இல்லை என்றுதான் அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.instagram.com/p/DHoxFmrRGEL/