கடவுள் இருக்காரு குமாரு.. விமானிக்கு ஒரு சல்யூட்.. இதுமட்டும் நடந்திருந்தால் 2000 பேர் இறந்திருப்பார்கள்.. நேரில் பார்த்தவர் பேட்டி..!

  அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோர விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர்வாசி…

passenger

 

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோர விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர்வாசி ஒருவர், விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்திருந்தால் 1,500 முதல் 2,000 உயிர்கள் பலியாகியிருக்கலாம் என்று கூறியிருப்பது, பெரும் துயரம் நூலிழையில் தவிர்க்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

லண்டன் நோக்கிப் புறப்பட்ட AI 171 விமானம், ஜூன் 12 அன்று மதியம் 1:38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து கிளம்பியது. ஆனால், சில நிமிடங்களிலேயே மேகானி நகருக்கு அருகிலுள்ள மருத்துவ விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது:

“விபத்து நடந்தபோது நாங்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம். விமானம் எங்கள் தலைக்கு மேலே மிக மிக அருகில் பறந்தது. அதன்பின் கீழே விழுந்து நொறுங்கியது.

“விபத்துக்கு பிறகு அங்கு ஒரே குழப்பம். நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடிச்சென்று, சுமார் 15 முதல் 20 பேரைக் காப்பாற்றினோம். வழக்கமாக விமானங்கள் உயரத்தில்தான் பறக்கும், ஆனால் இது வீடுகளுக்கு மிகவும் அருகில் வந்தது. குடியிருப்பு பகுதியிலிருந்து சற்று விலகி விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய விமானிக்கு ஒரு சல்யூட். இல்லையென்றால், 1,500 முதல் 2,000 பேர் உயிரிழந்திருப்பார்கள்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விமானம் குடியிருப்பை நோக்கி செல்லாமல் விமானி தான் நிச்சயம் விமானத்தை மெடிக்கல் கல்லூரி கட்டிடத்தின் மீது திருப்பி இருப்பார் எனவும், அதனால் ஆயிரக்கணக்கானோர் உயிர் தப்பினர் என்றும் அந்த பகுதியில் உள்ள பலர் கூறி வருகின்றனர்.

விமான விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள், சுமார் 825 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பயங்கர வெடிச்சத்தத்துடன் தீப்பிழம்பாக வானில் சென்றதை கண்டதாக விவரித்துள்ளனர். தரைமட்ட காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின்படி, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் மேலே ஏற திணறி, பின்னர் கீழே விழுந்து வெடித்து சிதறியுள்ளது.