குறைவான விலையில் ஆப்பிள் வெளியிடும் VR ஹெட்செட்.. நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு ஜாலி..!

By Bala Siva

Published:

ஜியோ போன்ற நிறுவனங்கள் VR ஹெட்செட்டை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஹெட்செட்டுகள் லட்சக்கணக்கில் விலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற VR ஹெட்செட்டை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதன் விலை சுமார் மூன்று லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடுத்தர வக்கத்தினருக்கு பயன்படும் வகையில் குறைவான விலையில் VR ஹெட்செட்டை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இதன் உற்பத்தி தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு இந்த VR ஹெட்செட் சந்தைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தனியார் நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் வாரிசை உருவாக்கி வருகிறது, இது 2024 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹெட்செட் வேகமான சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

இந்த நிலையில் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் மலிவான பதிப்பு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிராது. இது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிவான மாடல் அசல் விஷன் ப்ரோவை விட குறைவான சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் இந்த சாதனம் AR மற்றும் VR பயன்பாடுகளை இயக்கும் அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...