Xiaomi Pad 5 ரூ.1000 சலுகை விலையில் வாங்க வேண்டுமா? இதோ முழு விவரங்கள்..!

Published:

உலகின் முன்னணி செல்போன் மற்றும் ஐபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று Xiaomi என்பதும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் Xiaomi நிறுவனத்தின் Xiaomi Pad 6 விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் Xiaomi Pad 5ன் விலை ரூபாய் 1000 குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

Xiaomi Pad 5 இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ரூ.25,999. என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 128ஜிபி வைஃபை மாடலுக்கு 24,999 மற்றும் ரூ. 256ஜிபி வைஃபை மாடலுக்கு 28,499 என்றும் விற்பனை செய்யப்பட்டது.

Xiaomi Pad 5 என்பது Qualcomm Snapdragon 860 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 120Hz அம்சத்துடன் 10.95-இன்ச் WQHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த சாதனம் 13MP பின்புற கேமரா மற்றும் 8MP செல்பி கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் 8,720mAh பேட்டரி, 33W அம்சங்கள் இருப்பதால் விரைவாக சார்ஜ் ஏறும்..

இந்நிலையில் Xiaomi Pad 5 விலை இந்தியாவில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு விவரம் இதோ:

* Mi Pad 5 128GB Wi-Fi: ரூ. 25,999 (விலை குறைக்கப்பட்ட பிறகு ரூ. 24,999)
* Mi Pad 5 256GB Wi-Fi: ரூ. 28,499 (விலை குறைக்கப்பட்ட பிறகு ரூ. 27,499)

விலைக் குறைப்பு அனைத்து முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கும் கிடைக்கிறது.

இந்நிலையில் விரைவில் அறிமுகமாக இருக்கும் Mi Pad 6 ஆனது Qualcomm Snapdragon 8 Gen 1 பிராஸசர் மூலம் இயக்கப்படும் என்றும், 120Hz அம்சத்துடன் 11-இன்ச் WQHD+ டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Mi Pad 6 இந்தியாவில் இன்னும் ஒருசில வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...