ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் புதிய Mac Studio.. என்னென்ன சிறப்பம்சங்கள்

Published:

ஆப்பிள் நிறுவனம் M2 Max மற்றும் M2 அல்ட்ரா சிப்களுடன் கூடிய புதிய Mac Studioவை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று முதல் அறிமுகம் ஆகியுள்ள இந்த Mac Studioவை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என்றும், ஜூன் 13, செவ்வாய்க் கிழமை வாடிக்கையாளர்களுக்கு வந்து சேரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய Mac Studio சாதனத்தின் விலை $1,999 இல் தொடங்கில் $3,999 வரை கிடைக்கும்.

புதிய Mac Studioவின் சில முக்கிய அம்சங்கள் இதோ:

புதிய Mac Studio M2 Max மற்றும் M2 அல்ட்ரா சிப்களால் இயக்கப்படுகிறது, இவை ஆப்பிள் வழங்கும் மிகவும் சக்திவாய்ந்த சிப்கள் என்பதால் நன்பகத்தன்மை உடையது. மேலும் M2 மேக்ஸ் சிப் 12-கோர் CPU, 32-core GPU மற்றும் 16-core நியூரல் எஞ்சின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. M2 அல்ட்ரா சிப் அடிப்படையில் 24-கோர் CPU, 64-core GPU மற்றும் 32-core நியூரல் எஞ்சின் ஆகியவற்றைக் கொண்து.

புதிய Mac Studioவில் 192 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. சிபியு, ஜிபியு மற்றும் நியூரல் எஞ்சின் இடையே பகிரப்படுகிறது. வேகமான செயல்திறன் மற்றும் சிறந்த பல்வேறு பணிகளுக்கு ஏற்றது.

புதிய Mac Studioவில் உயர் அலைவரிசை HDMI போர்ட் உள்ளது. மேலும் 240Hz இல் 8K டிஸ்ப்ளேவில் உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோ காட்சிகள் மனதை கவரும்

மேலும் வைஃபை 6இ மற்றும் புளூடூத் 5.3 ஆகிய அம்சங்களும் இதில் உள்ளது. மொத்தத்தில் புதிய Mac Studio ஒரு சக்திவாய்ந்த சாதனம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் உங்களுக்காக...