பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அயோத்தியாவில் மேலும் ஒரு சொத்தை வாங்கியுள்ளதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமிதாப் பச்சன், அயோத்தியில் 25,000 சதுர அடிகள் பரப்பளவிலான இடத்தை வாங்கியதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.40 கோடி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த நிலம், ‘சரயூ’ என்ற உயர் தர நில வேலைத் திட்டத்துக்கு அருகில் உள்ளது. இந்தத் திட்டத்தில் ‘கல்கி’ படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர் முதலீடு செய்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அமிதாப் பச்சன், தயாரிப்பாளர் லலித் பண்டிட் வைத்திருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் அயோத்தியில் ரூ. 20 கோடிக்கு நிலம் வாங்கியதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் அமிதாப் பச்சன் அயோத்தியில் செய்த முதலீடுகளில் இது நான்காவது சொத்து வாங்கும் நடவடிக்கை. ராமர் கோவில் கட்டுவதற்கு முன்பே, அவர் 5,372 சதுர அடிகள் பரப்பளவிலான நிலத்தை ரூ.4.54 கோடிக்கு வாங்கியிருந்தார்.
அதைத் தவிர, அவர் சரயூ திட்டத்தில் ₹14.5 கோடி முதலீடு செய்து, 54,000 சதுர அடிகள் பரப்பளவுள்ள நிலப்பகுதியை வாங்கியிருந்தார்.
மேலும் அமிதாப் பச்சன் தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் நினைவாக அங்கு ஒரு நினைவிடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முதலீடுகளில், அமிதாப் பச்சனுடன் அவரது மகன் அபிஷேக் பச்சனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
பொதுவாகவே அமிதாப் பச்சன் ஒரு பெரிய நில முதலீட்டாளர். அவரும் அவரது மகன் அபிஷேக் பச்சனும் இணைந்து ஏற்கனவே ₹25 கோடிக்கு 10 சொத்துகள் வாங்கியிருக்கிறார்கள்.
மேலும் இன்னும் சில ஆண்டுகளில் அமிதாப் மும்பையை விட்டு வெளியேறி அயோத்தியில் மன நிம்மதிக்காக செட்டிலாக போவதாகவும் ஒரு வதந்தி உலாவி வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
