கமலா ஹாரிஸ்-க்கு ஆதரவாக களமிறங்கிய இந்துக்கள்.. அமெரிக்க தேர்தலிலும் மதம்?

Published:

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் களமிறங்கியதாக கூறப்படுவதை அடுத்து அமெரிக்க தேர்தலிலும் மதம் புகுந்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மதப் பிரச்சாரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கமலா ஹாரிஸ் அம்மா சென்னையை சேர்ந்தவர் என்பதும் அப்பா ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்தியரின் ஆதரவு கிடைத்து வருகிறது என்றும் இந்தியர்கள் மட்டும் இன்றி தெற்காசியாவை சேர்ந்த அனைவருமே தங்கள் பகுதியை சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று விருப்பப்பட்டு தேர்தல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து ’இந்துக்கள் பார் கமலா ஹாரிஸ் என்ற குழுவை உருவாக்கி உள்ளதாகவும் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் சிறப்பாக இருக்கும் என்றும் ஆனால் டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்கு பேரழிவு என்றும் இந்துக்கள் அங்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கமலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்கள் வீடுகளின் முன் குறியீடுகளை வைக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆதரவாக நன்கொடைகளை அளிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் உங்களுக்காக...