புனேவில் நடந்த ஒரு டெலிவரி சம்பவம், இன்று சமூக வலைதளங்களில் நெஞ்சை வருடும் மனித நேயத்தின், பொறுமையின், நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக பரவி வருகிறது.
ஸ்ரீபால் காந்தி என்பவர் பேஸ்புக்கில் ’அந்த சம்பவம் தன்னை ஆழமாக தொட்டுள்ளதாகவும், வாழ்க்கையில் ஒரு முக்கியப் பாடமாக மாறிவிட்டதாகவும் எழுதியுள்ளார். அவர் தனது பதிவில் கூறியதாவது:
ஒரே ஒரு சாண்ட்விச் மட்டுமே ஆர்டர் செய்தேன். வேறு எந்த ஸ்னாக்சும் இல்லை. சாண்ட்விச் விலை அவ்வளவு அதிகமில்லை என்பதால் டெலிவரி பாய்கள் அதனை கொண்டு வருவார்களா என்ற தயக்கம் ஏற்பட்டது. ஒரு டெலிவரி நிறுவனம் தயக்கத்துடன், “சார், தயவுசெய்து வேறு நிறுவனம் அல்லது Zomato-வையா தொடர்பு கொள்ளுங்கள்,” என்று கூறியது.
ஸ்ரீபால், Subway-யைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் மன்னிப்பும் கூறி, கூடுதலாக ரூ.20 கொடுத்தால் டெலிவரி பையனை மீண்டும் அனுப்புகிறோம்” என தெரிவித்தனர். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது: டெலிவரி பையன்கள், Zomato ஊழியர்கள்; ரெஸ்டாரெண்டின் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள். எனவே அவர்கள் விருப்பப்படி தான் மீண்டும் செல்ல முடியும். ஆனால் அந்த ஒரு டெலிவரி நபர் தயங்கவே இல்லை. “சார், இது என் பொறுப்பு. வாடிக்கையாளர் சந்தோஷமாக இருக்கணும்,” என்றான்.
அவர் ஒரே ஒரு சாண்ட்விட்ச் மட்டும் கொண்டு வந்து, சிரித்த முகத்துடன் வழங்கினார். ரூ.20-ஐ அதிகமாக கொடுத்தபோதும், அதை வாங்கி கொள்ள மறுத்தார். “கடவுள் எனக்கு இவ்வளவு கொடுத்திருக்கிறார். நான் ஏன் அதிகமாக பணம் வாங்க வேண்டும் என்று கூறினார். அதன்பின் அந்த நபரிடம் பேச்சு கொடுத்தபோது பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது.
அந்த நபர் சில வருடங்களுக்கு முன் பெரிய பதவியில் இருந்தவர். மாத வருமானம் ரூ.1.25 லட்சம். ஆனால் ஒரு விபத்து, அவரின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. இடது கை, கால்கள் வாதமடைந்தன. வேலை போனது. வாழ்க்கை சிதைந்தது.
“Zomato என் வாழ்க்கையை மாற்றிச்சு, நான் வீழ்ந்த போது, வேலை வாய்ப்பு கொடுத்தது Zomato தான். என் குடும்பத்தையும் காப்பாத்திச்சு. நான் ஊனமுற்றவராக இருக்கலாம், ஆனா என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தாங்க. Zomato-வின் பெயருக்கே நான் மதிப்பு தர வேண்டும் என்றார்.
மேலும் அவரது மகள் தற்போது பல் மருத்துவராக படிக்கிறார். நான் பணம் சம்பாதிக்கவே இல்லை, என் மகளின் கனவை உயிருடன் வைத்திருக்கத்தான் ஓடுறேன் என்றார். வாழ்க்கையை கடினமானதாக கருதவில்லை. புலம்பவும் இல்லை. காரணங்களும் சொல்லவில்லை. சிரித்தார், மேலும் நம்பிக்கையுடன் கடவுள் இருக்கார். நான் ஏன் கவலைப்படணும்? என்றார் புன்னகையுடன்
ஸ்ரீபால் காந்தி, “இன்று ஒரு சாண்ட்விச் வாங்கினேன். ஆனால் என்னோட மனதில் மிஞ்சியது… நன்றி, துணிச்சல், நம்பிக்கை” என்று முடிக்கிறார். மேலும் Zomato நிறுவனர் Deepinder Goyal மற்றும் அவரது குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது பாராட்டுக்களையும் பெருமிதங்களையும் பெற்றுள்ளது. ஒருவர்: “இப்படி ஒரு மனிதருக்குச் சல்யூட்!”
மற்றொருவர்: “அற்புதமான, உண்மையிலேயே தோற்றமளிக்கும் கதை என்றும், மிகவும் ஊக்கமளிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் என பலர் கமெண்ட்ஸ்களாக குறிப்பிட்டு வருகின்றனர்.