அமேசான் ப்ரைம் கட்டணத்தை திடீரென குறைக்கின்றதா? காரணம் இதுதான்..!

Published:

உலகம் முழுவதும் ஓடிடி நிறுவனங்களின் போட்டிகள் அதிகமாகி வரும் நிலையில் கட்டண குறைப்பு அல்லது தரமான காட்சிகள் வைக்க வேண்டிய கட்டாயத்தில் ஓடிடி நிறுவனங்கள் உள்ளன. உலகின் முன்னணி ஓடிடி தளங்களான அமேசான் நெட்பிளிக்ஸ் ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் அதிகப்படியான திரைப்படங்களையும் வெப்தொடர்களையும் தங்கள் ஓடிடியில் இணைத்து வருகின்றன என்பதும் அதேபோல் கட்டணத்திலும் சில சலுகைகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அமேசான் பிரைம் தற்போது கட்டணத்தை குறைத்து பார்வையாளர்களுக்கு விளம்பரத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஓடிடி தளத்தில் விளம்பரத்தை சேர்ப்பதை பார்வையாளர்கள் விரும்புவதில்லை. கட்டணம் செலுத்தி ஒரு ஓடிடி தளத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதில் வலுக்கட்டாயமாக விளம்பரத்தை திணிப்பது என்பது கூடுதல் எரிச்சலை பார்வையாளர்களுக்கு தரும்.

ஆனால் அதே நேரத்தில் விளம்பரத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு கட்டணத்தை குறைக்கும் வகையில் அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலக அளவில் இருக்கும் நெட்பிளிக்ஸ் மற்றும் ஹூலு ஆகிய ஓடிடி போட்டியை சமாளிப்பதற்காக அமேசான் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனம் விளம்பரத்துடன் கூடிய குறைந்த சந்தாவை அறிமுகப்படுத்துவதற்கு பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் ஒளிபரப்பும் போது டிவியை ஆஃப் பண்ணவோ அல்லது வேறு சேனலுக்கு மாறவும் வாய்ப்பு இருப்பதால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையும். அதே நேரத்தில் கட்டணத்தை குறைத்தால், குறைந்த கட்டணம் என்று எண்ணி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் கலவையான விமர்சனத்தை கொண்டுள்ள விளம்பரத்துடன் கூடிய சந்தாவை அமேசான் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பது எந்த அளவுக்கு பயனாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...