ட்விட்டர் போலவே ஃபேஸ்புக்கிலும் வெரிஃபைடுக்கு துட்டு.. ஒரு மாதத்திற்கு இவ்வளவா?

Published:

ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் வெரிஃபைட் என்ற அம்சத்தை கட்டணமாக மாற்றியது என்பதும் மூன்று விதமான வண்ணங்களில் வெரிஃபைட் தற்போது நடைமுறையில் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். அதேபோல் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை வைத்துள்ள மெட்டா நிறுவனமும் கட்டணத்துடன் கூடிய வெரிஃபைட் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை முதலில் இந்தியாவில் செயல்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை வைத்துள்ள மெட்டா நிறுவனம் இந்தியாவில் வெரிஃபைட் அம்சத்திற்கு மாதம் ரூபாய் 699 பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வெரிஃபைடு பயனாளர்கள் தங்கள் கணக்குகளை ஆள் மாறாட்டம் மற்றும் பிற முறைகேடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அதுமட்டுமின்றி போலி கணக்குகளை உருவாக்கினால் அதை அகற்றவும் மெட்டா நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தங்கள் கணக்குகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக உதவி பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

இன்னும் ஒரு சில மாதங்களில் மெட்டா நிறுவனம் கட்டண வெரிஃபைட் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில் அது எந்த அளவுக்கு பயனர்கள் மத்தியில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மெட்டா வெரிஃபைட் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு ஒரு சில நிறைகள் இருந்தாலும் சில குறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆள் மாறாட்டம் மற்றும் முறைகேடுகளில் இருந்து பயனர்கள் தங்கள் சமூக வலைதளத்தை கணக்கை பாதுகாக்க உதவும் என்றாலும் சமூக வலைதளத்திற்கு மாதம் ரூ.699 செலவழிப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் போலி பயனர்களின் அடையாளங்களை மெட்டா எவ்வாறு கண்டுபிடிக்கும்? போலி கணக்குகள் இருந்தால் தானாகவே நீக்கிவிடுமா? அல்லது நாம் புகார் அளித்தால் தான் நீக்கப்படுமா? என்பதையும் தெளிவாக கூறவில்லை. ஒரு போலி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் அந்த கணக்கை நாம் எப்போது பார்க்கிறோமோ அப்போதுதான் புகார் கொடுக்க முடியும், அதுவரை அந்த போலி கணக்கு இயங்கிக் கொண்டுதான் இருக்கும் என்ற கேள்வியும் வருகிறது.

மொத்தத்தில் மெட்டாவின் இந்த கட்டண வெரிஃபைட் திட்டம் எந்த அளவிற்கு பயனர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...