தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் நிர்வாக கட்டமைப்பில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி புரட்சி ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை முதல் தொழில்துறை வரை அனைத்து அரசு துறைகளிலும் தினந்தோறும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அமைச்சர்களும், உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் களத்தில் இறங்கி செயல்பட்டு வருவதால், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அசுர வேகத்தில் இயங்க தொடங்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் சாமான்ய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், அதே நேரத்தில் கடமை தவறும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் நடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய தவெக அரசின் இந்த கராறான அணுகுமுறையால், இனி அரசு ஊழியர்கள் சும்மா அலுவலகத்திற்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, தங்களது சொந்த வேலைகளைப் பார்க்கவோ அல்லது அலட்சியமாக இருக்கவோ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. காலையில் பணி நேரத்திற்கு துல்லியமாக வர வேண்டும், பொதுமக்களின் கோப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற முதலமைச்சரின் நேரடி உத்தரவு அனைத்துத் துறைகளுக்கும் பறந்துள்ளது. இந்த ஆட்சியில், ஒவ்வொரு அரசு ஊழியரின் செயல்பாடுகளும் தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருவதாகத் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே அரசு பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, பொறுப்பாக வேலை பார்த்தால் மட்டுமே தற்போதைய தவெக ஆட்சியில் அரசு ஊழியர்கள் தப்பிக்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. லஞ்சம், ஊழல், கோப்புகளை கிடப்பில் போடுதல் போன்ற கடந்த கால புரையோடிப் போன பழக்கவழக்கங்களுக்கு இந்த அரசு ‘பங்கமான’ முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. மக்கள் கொடுக்கும் வரி பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, மக்களுக்கே சேவை செய்ய மறுக்கும் எந்தவொரு அலட்சிய போக்கையும் தற்போதைய புதிய முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டார் என்பது அவரது கராறான நடவடிக்கைகளின் மூலம் தெளிவாக தெரிகிறது.
அரசு அலுவலகங்களில் ‘ஓபி’ அடிக்க நினைக்கும் ஊழியர்களுக்கும், தங்களது கடமைகளை சரியாகச் செய்யாமல் காலம் கடத்த நினைப்பவர்களுக்கும் இந்த ஆட்சியில் வேலையே பறிபோய்விடும் என்ற அளவுக்கு சட்ட விதிகள் கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளன. தவறு செய்யும் அதிகாரிகள் மற்றும் தங்களது பொறுப்புகளை உணராமல் செயல்படும் ஊழியர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான விசாரணைகள் முடுக்கப்பட்டு, தற்காலிகப் பணிநீக்கம் அல்லது நிரந்தர பணிநீக்கம் போன்ற அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. பயமும் பொறுப்புணர்வும் இருந்தால் மட்டுமே அரசு இயந்திரம் சரியாக செயல்படும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்த நிர்வாக சீரமைப்புப் பணிகள் சக்கையாக பிழிந்து வேலை வாங்கும் பாணியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முந்தைய ஆட்சி காலத்தை போல இல்லாமல் தற்போது, விடியற்காலையிலேயே கோப்புகளை ஆராய்ந்து, சட்டம் ஒழுங்கு முதல் நகர்ப்புற மேம்பாடு வரை அனைத்து துறைகளின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நேரடியாக தொடர்புகொண்டு கேள்வி எழுப்பும் முதலமைச்சரின் சுறுசுறுப்பு, ஒட்டுமொத்தத் தமிழகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கார்ப்பரேட் பாணி வெற்று விளம்பரங்கள் அல்லது சில தனிநபர்களின் சுய லாபங்களுக்காக மக்களின் தேவைகளை புறக்கணிக்கும் கடந்த கால தவறுகளை இந்த புதிய தவெக அரசு அடியோடு வேரறுத்து வருகிறது. அரசு ஊழியர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் முழுமையாக பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் ஒரு கமாண்டிங் நிர்வாகமாக இந்த அரசு திகழ்கிறது.
முடிவாக, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த அதிரடி மாற்றங்கள், “இதுதாண்டா மக்களுக்கான அரசு!” என்று சாமான்ய நடுத்தர மக்களை மனமாற பெருமிதம் கொள்ள வைத்துள்ளது. வெற்று சுவரொட்டிகள் மற்றும் விளம்பர அரசியலை நம்பாமல், களத்தில் இறங்கி சாமான்ய மக்களின் பாதுகாப்பு மற்றும் சேவைகளை 100% உறுதி செய்வதே தவெக அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் நிஜமான விடியலாகும். அரசு ஊழியர்களின் அலட்சிய போக்கை ஒடுக்கி, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மற்றும் முன்மாதிரி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் விஜய் அவர்கள் எடுத்து வரும் இந்த அசுர வேக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிர்வாக முடிவுகளை நோக்கி ஒட்டுமொத்தத் தமிழகமும் தற்போது ஆவலோடு காத்து கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
