அஜீத், விஜய், சூர்யா பட தயாரிப்பாளர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்..

Published:

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், 90-களில் மிரட்டும் வில்லன் நடிகராகவும் விளங்கிய தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். மோகன் நடராஜன் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை நடத்தி வந்தார். கடந்த 1986-ல் பூக்களைப் பறிக்காதீர் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பிரபு நடிப்பில் வெளியான என் தங்கச்சி படிச்சவ என்ற படத்தினையும் தயாரித்தார்.

இவ்விரு படங்களுமே பரவலான வெற்றியைக் கொடுக்க தொடர்ந்து சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த வேலை கிடைச்சிடுச்சு, அருண் பாண்டியன் நடிப்பில் வெளிவந்த கோட்டை வாசல் போன்ற படங்களைத் தயாரித்தார். தொடர்ந்து நடிப்பின் மீது ஆர்வம் ஏற்படவே சர்க்கரைத்தேவன், நம்ம அண்ணாச்சி, பதவிப் பிரமாணம், கோட்டை வாசல், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, மகாநதி, பட்டியல் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தார் மோகன் நடராஜன்.

சினிமா உலகிற்குப் பொருந்தாத பழமொழி எது தெரியுமா? அதுக்கு இவங்களே சாட்சி…!

மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த கண்ணுக்குள் நிலவு, சூர்யா நடிப்பில் வெளியான வேல், அஜீத் நடிப்பில் வெளியான ஆழ்வார் போன்ற ஹிட் படங்களைத் தயாரித்தார். மேலும் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தினையும் இவர் தயாரித்தார். இப்படி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்த மோகன் நடராஜன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றியிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிக்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

சினிமாவில் நலிந்த கலைஞர்களுக்கும், பல முன்னணி நடிகர்களின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தவர் மோகன் நடராஜன் என்பது உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் நடராஜன் உடலுக்கு டி.ராஜேந்தர், பி.வாசு, நடிகர் சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...