சினிமா உலகிற்குப் பொருந்தாத பழமொழி எது தெரியுமா? அதுக்கு இவங்களே சாட்சி…!

By Sankar Velu

Published:

தமிழ் சினிமாவில் பல சமயங்களில் ஆச்சரியமான சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு. அந்த வகையில் பழமொழியே இங்கு பலிக்கவில்லையே என்பது புரியாத புதிராகத் தான் உள்ளது. வாங்க பார்ப்போம்.

‘விதையொன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா’ என்ற பழமொழி தான் தமிழ் சினிமா உலகிற்குப் பொருந்தாது. எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவி இயக்குனர் தான் டைரக்டர் ஷங்கர். அவர் எப்படிப்பட்ட பிரம்மாண்ட இயக்குனர் என்பது நமக்கு நல்லா தெரியும்.

ஆனால் இன்றைக்கு ஷங்கர் எவ்வளவு பிரம்மாண்டமான படங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெரியும். எஸ்.ஏ.சந்திரசேகரைப் பொருத்தவரை திட்டமிட்டுப் படம் எடுப்பதில் வல்லவர். அவர் எந்தளவுக்கு சிக்கனமாக படப்பிடிப்பை நடத்த வேண்டுமோ அந்தளவு சிக்கனமாக எடுப்பவர்.

அப்படிப்பட்ட பட்டறையில் இருந்து ஷங்கர் இப்படிப்பட்ட படங்களை இயக்குகிறார் என்றால் விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா என்ற பழமொழி பொருந்தாது என்று தான் நான் நினைக்கிறேன்.

jagan mohini
jagan mohini

விட்டலாச்சார்யா என்பவர் பிரபல தெலுங்கு திரையுலக இயக்குனர். அவர் எப்படிப்பட்ட படங்களை எல்லாம் தயாரித்தார், இயக்கினார் என்பது நமக்குத் தெரியும். அவரது இயக்கத்தில் வெளியான ஜகன் மோகினி படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழிலும் வசூலை வாரிக்குவித்தது.

அவரது உதவியாளர் தான் முரளியின் தந்தையும், அதர்வாவின் தாத்தாவுமான சித்தலிங்க அய்யர். இவர் கன்னடப்பட உலகில் மிகவும் முக்கியமான கலைப்படைப்பை உருவாக்கும் இயக்குனர். விட்டலாச்சார்யா எப்படிப்பட்ட படங்களை இயக்கினார்?

சித்தலிங்க அய்யர் எப்படிப்பட்ட படங்களை இயக்கினார் என்பதை எல்லாம் நீங்கள் கூர்ந்து கவனித்தால் தான் உங்களுக்கும் விதையொன்று போட சுரையொன்று முளைக்குமா என்ற பழமொழி சினிமா உலகுக்குப் பொருந்தாது என்பது தெரிய வரும்.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...