37000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது திடீரென நிர்வாணமாக டான்ஸ் ஆடிய விமான பணியாளர்.. தரையிறங்கியதும் கைது..!

  சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், பிஸினஸ் கிளாஸ் கழிவறையில் நிர்வாணமாக நடனமாடிக்கொண்டிருந்த நிலையில் ஒரு விமான பணிப்புரியாளர் கைது செய்யப்பட்டார். தனது பணியை சரியாக செய்யாமல் உணவு…

naked

 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், பிஸினஸ் கிளாஸ் கழிவறையில் நிர்வாணமாக நடனமாடிக்கொண்டிருந்த நிலையில் ஒரு விமான பணிப்புரியாளர் கைது செய்யப்பட்டார்.

தனது பணியை சரியாக செய்யாமல் உணவு மற்றும் பானங்களை சரியான நேரத்தில் வழங்காததால் மற்ற பணியாளர்கள் அவரைத் தேட ஆரம்பித்தனர். பின்னர் விமானத்தை முழுவதுமாகத் தேடியபோது, அவர் முழுமையாக நிர்வாணமாகவும், கழிவறையில் நடனமாடிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

“அந்த மனிதர் போதை மருந்துகள் எடுத்திருந்ததாக நாங்கள் நினைக்கிறோம். விமானம் 37,000 அடி உயரத்தில் இருந்தபோதும், இந்த மனிதர் மற்றவர்களை விட ‘அதிக உயரத்தில்’ இருந்தார் போலத் தோன்றியது,” என ஒரு பணியாளர் கருத்து தெரிவித்தார்.

மற்ற பணியாளர்கள் உடனடியாக பிஸினஸ் கிளாஸில் உள்ள ஃபர்ஸ்ட் கிளாஸ் பைஜாமாக்களை அவர் மீது போட்டு, அவரை ஃபர்ஸ்ட் கிளாஸ் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். பின் விமானம் தரையிறங்கும் வரை அவர் அங்கேயே இருந்தார்.

விமானம் தரையிறங்கிய பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு சக்கர நாற்காலியில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, விமான நிலையக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தற்பொழுது அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்; விசாரணை நடைபெற்று வருகிறது.