பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததாக குற்றச்சாட்டுடன் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தின் காசிம் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது காசிம் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காசிம் சகோதரர், இந்திய உளவுத்துறை அமைப்புகளால் நீண்ட நாட்களாக கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர் என்றும், அவர் பாகிஸ்தானுடனான சந்தேகமான தொடர்புகள் காரணமாகவே இது நிகழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
காசிம் சகோதரர், உறவினர்களை பார்ப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடிக்கடி பயணித்துள்ளார். ஆனால், அந்த பயணங்களின்போது, பாகிஸ்தானிய உளவுத்துறை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளார், அவர்களை நேரில் சந்தித்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. இவரது சந்திப்புகள் மற்றும் செயல்கள் உளவுத்துறையினரிடம் தீவிர கவலையை ஏற்படுத்தியதால், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காசிம் சகோதரரின் பாஸ்போர்ட் காலாவதியாகிய பிறகு, பாகிஸ்தானிய தொடர்புகளுடன் தகவல் பரிமாற்றத்தை தொடர அல்லது புதிய தொடர்புகளை ஏற்படுத்த காசிம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவரது மீதான கண்காணிப்பை அதிகரிக்கச் செய்தது. இதற்குப் பிறகே அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் மீது நடைபெறும் விசாரணை முடிவை பொறுத்து குற்றப்பத்திரிக்கையின் போது சில பிரிவுகள் சேர்க்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உளவு தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தற்போது ஆராயப்பட்டுவருகின்றன,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவால் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட காசிம், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்றும், ஜம்மு & காஷ்மீரில் பழல்காம் தாக்குதலுக்கு முன்னர் சில நாட்களுக்குள் பாகிஸ்தான் சென்றுவிட்டதாகவும் நம்பப்படுகிறது. போலீஸ் வட்டாரங்களின்படி, அவர் பாகிஸ்தானிய ருபாய்களில் ₹2 லட்சம் (இந்திய மதிப்பில் ₹61,000) வரை தவணைகளில் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகை, முக்கியமான ரகசிய தகவல்களை வழங்கியதற்கான பரிசாக வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
விசாரணை நேரத்தில் பழல்காம் தாக்குதலுடன் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிறகு, தனது மொபைலிலிருந்த அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டதாக காசிம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரது மொபைலில் டெலிட் செய்யப்பட்ட தரவுகளை மீட்க முயற்சி செய்கிறார்கள்.