முன்னாள் வெளியுறவு அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் பாகிஸ்தான் போன்று இந்தியா தன்னைச் சிறிதாக்கிக் கொள்ள கூடாது; இந்தியா என்பது பெரிய நாடு, உலகில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய நாடு, எனவே இந்தியா–பாகிஸ்தான் என யாரும் இணைத்து பேச வேண்டாம்.
நாம் பாகிஸ்தான் அல்ல, அவர்களை விட பெரியவர்கள். நம் சக்திக்கேற்ப நம்பிக்கையையும் மதிப்பையும் உலகம் நமக்கு அளிக்கிறது. பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டியது நமது வேலை. அதை முடித்துவிட்டோம், பாகிஸ்தானின் நிலம், அதிகாரம் எதற்கும் நாம் ஆசைப்படவில்லை.
“நாம் நம்மை பாதுகாக்க விரும்புகிறோம், உலகத்தை வழிநடத்த விரும்புகிறோம். பாகிஸ்தான் அளவுக்கு நம்மை சுருக்க முடியாது. இந்தியா–பாகிஸ்தான் என்ற இணைப்பில்லாமல் பேச வேண்டும். நமது பல்லுயிர் பண்பாட்டு சிறப்பை, ஒற்றுமையில் வாழும் தன்மையை உலகிற்கு காட்ட விரும்புகிறோம். நாங்கள் தேசபக்திகள்; மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்; நமது நாட்டைத் தாயாக கருதுகிறோம்”
இந்தியா முதலில் பாகிஸ்தானை தொடர்பு கொண்டது என்ற தகவல் பொய்யானது என்று சல்மான் குர்ஷித் தெளிவுபடுத்தினார். “DGMO-வின் பாகிஸ்தானின் அழைப்பை தொடர்ந்து இந்தியா தாக்குதல் நிறுத்தியது. நாங்கள் தொலைபேசியில் அழைக்கவில்லை, அவர்களே அழைத்தனர்” என்று கூறினார்கள்.
எனினும், பாகிஸ்தான் மீண்டும் சில மணி நேரம் தாக்குதலை நடத்தியது. “அங்கு யாரும் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. இராணுவத்துக்குள்ளே பல பிரிவுகள் அதிகாரத்துக்காக போட்டியிடுகின்றன. அதையும் மீறி நாம் அமைதியாக இருந்தோம்” எனவும் அவர் கூறினார். இந்தியாவின் சிறப்பை நோக்கிய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா அதன் வலிமையைக் காட்ட வேண்டியது அவசியம்.
“பாகிஸ்தான் பயங்கரவாதத்தை விட்டுவிட வேண்டும் என்பதே இந்தியாவின் ஒரே கோரிக்கை. இது அரசியல் கட்சி வரம்புகளை தாண்டிய ஒன்றாகும். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இணைந்த வருகை அதனை நிரூபிக்கிறது என்றும் கூறினார்.
‘ஆபரேஷன் சிந்தூருக்குப்’ பின், பாகிஸ்தான் வழிநடத்தும் பயங்கரவாதத்தை வெளிநாடுகளுக்கு விளக்குவதற்காக 7 அனைத்து கட்சி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, பயங்கரவாதத்துக்கு இந்தியா எவ்வாறு கடுமையான பதிலளித்தது என்பதை உலக நாடுகளிடம் எடுத்துரைக்கின்றன. இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்