1mm சாலை விரிசலை கூட கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம்.. துபாய் போக்குவரத்து போலீசார் ஆச்சரியம்..!

Published:

துபாய் போக்குவரத்து போலீசார் சாலைகளை மேம்படுத்தவும் சாலை பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த தொழில்நுட்பம் சாலையில் ஒரே ஒரு மில்லி மீட்டர் விரிசலை கூட கண்டுபிடித்து போக்குவரத்து போலீசாருக்கு உதவி செய்து வருவதாக கூறப்படும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட அனைத்து தொழில் துறையிலும் AI பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த AI தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவதன் காரணமாக மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது என்று கூறப்பட்டாலும் பெரு நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது என்பதும் துல்லியமாக ஒரு விஷயத்தை செய்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் துபாய் போக்குவரத்து போலீசார் சமீபத்தில் சாலைகளில் ஏற்படும் 13 வகையான குறைகளை கண்டறியும் AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை கொண்ட காரில் போக்குவரத்து போலீசார் செல்லும் போது அந்த பாதையில் உள்ள 13 வகையான குறைகளை கண்டறிந்து போலீசாருக்கு அறிவுறுத்துகிறது. குறிப்பாக ஒரே ஒரு மில்லி மீட்டர் சாலையில் விரிசல் இருந்தால் கூட அதை கண்டுபிடித்து தகவல் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ரோந்து கார்களை பயன்படுத்தி இந்த AI தொழில்நுட்பத்தின் மூலம் சாலைகளை செப்பனிட்டு வருகின்றனர். இதனால் துபாயில் உள்ள சாலைகள் உலக அளவில் தரம் வாய்ந்ததாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த ரோந்து வாகனத்தில் அதிநவீன AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் சாலைகளில் பயணிகள் எந்த விதமான பயமும் என்று செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான சாலை ஆய்வுகளை விட ஒரு மில்லி மீட்டர் கொண்ட சிறிய விரிசல்களை கூட கண்டறிய முடியும் என்ற தகவல் உலக நாடுகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயை அடுத்து இந்த தொழில்நுட்பத்தை இந்தியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. துபாயில் உள்ள 18 ஆயிரத்து 765 கிலோமீட்டர் பாதைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழுக்க முழுக்க சாலையை ஸ்கேன் செய்து நவீனப்படுத்த முடியும் என்று போக்குவரத்து போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் உள்ள விரிசலில் அகலம், ஆழம் மற்றும் இருப்பிடம் போன்றவற்றை சரியாக கணித்து இந்த இடையே தொழில்நுட்பம் தெரிவிப்பதால் போக்குவரத்து போலீசாருக்கு சாலைகள் பராமரிப்பு செய்வது  மிகவும் எளிதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...