உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.. செப்.14-க்குள் முந்திக்கோங்க..

Published:

நாடு முழுவதும் தற்போது இந்தியக் குடிமகன் என்பதற்கு முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டையும், ஒரு வயது குழந்தை முதல் வயதானவர்கள் வரை அடையாள ஆவணமாகவும் விளங்குவது ஆதார் கார்டு. இதற்கு முந்தைய மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம் பா.ஜ.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. தற்போது அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் எப்போதுமே ஆதார் சென்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கும். மேலும் ஆதார் கார்டில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய ஆதார் பெறுதல் போன்றவற்றிற்கும் பொதுமக்கள் வந்தவண்ணம் உள்ளனர். முதலில் ஆதார் மையங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்ட இப்பணிகள் தற்போது அஞ்சலகங்கள், வங்கிகள், இ-சேவை மையங்கள், தாலுகா அலுவலங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் சரிபார்ப்புப் பணி, பதிவு ஆகியவை செய்யப்படுகிறது.

ஆர்டர் செய்த 13 நிமிடங்களில் லேப்டாப் டெலிவரி செய்த பிளிப்கார்ட்.. கூடவே ஒரு ட்விஸ்ட்..!

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் தற்போது அவசியம் என்பதால் பழைய ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதாரில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் தற்போது கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 14-ம் தேதிக்குள் ஆதார் சம்பந்தப்பட்ட அனைத்து திருத்தங்களும் கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ளலாம். செப்டம்பர் 14-ம் தேதிக்குப் பிறகு அனைத்து ஆதார் திருத்தங்களுக்கும் ஆதார் அமைப்பு கட்டணம் நிர்ணயித்துள்ளது. இனி குறிப்பிட்ட தொகை செலுத்தினால் மட்டுமே ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதால் திருத்தம் மேற்கொள்ளும் போது உடன் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணம் உடன் எடுத்துச் செல்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...