கோடியில் சம்பளம்… ஆனா செலவு பண்ண நேரம்தான் இல்ல… புலம்பும் என்விடியா ஊழியர்கள்!

Published:

கோடி கணக்கில் சம்பளம் கிடைத்தும் அதை செலவு செய்ய நேரம் கிடைக்காமல் வாரத்தில் ஏழு நாட்களிலும் பணிபுரிவதாக என்விடியா ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

உலகின் முன்னணி நிறுவனமான என்விடியா நிறுவனம், கிராபிக்ஸ் கார்டுகள், கம்ப்யூட்டர் மதர் போர்டுகள், வீடியோ கேம்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் ஐசி தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் மிகப்பெரிய லாபத்துடன் இயங்கி வருகிறது என்பதும் இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில ஆண்டுகளில் 3000 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருடத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும் புலம்பி வருகின்றனர். வாரத்தின் ஏழு நாட்களும் வேலை உண்டு என்றும் ஒவ்வொரு நாளும் அதிகாலை ஒரு மணி, இரண்டு மணி வரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும் தினந்தோறும் 7 முதல் 10 மீட்டிங் அட்டெண்ட் செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு மீட்டிங்கிலும் சுமார் 30 பேர்கள் இருப்பார்கள் என்றும் ஒவ்வொரு மீட்டிங் முடியும் போதும் மன அழுத்தம் ஏற்படும் என்றும் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் சம்பளம் அதிகமாக இருப்பதால் இந்த நிறுவனத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை என்றும் இது தங்கத்தினால் ஆன சிறைச்சாலை என்றும் சிலர் பதிவு செய்து வருகின்றனர். கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்தும் அதை வெளியே சென்று செலவு செய்ய நேரம் இல்லாமல் இருக்கும் நிலைதான் உள்ளது என்றும் என்விடியா நிறுவன ஊழியர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...