எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.. திமுகவுக்கு மெஜாரிட்டி வந்துவிடக்கூடாது.. குழி பறிப்பது எதிர்க்கட்சிகள் அல்ல.. கூட்டணி கட்சிகள்.. அரசியலில் இதுவும் நடக்கும்..!

    ஒருபுறம், அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி, 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்று வெளிப்படையாகவே அறிவித்து வருகிறது. மறுபுறம், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள்,…

dmk 1

 

 

ஒருபுறம், அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி, 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்று வெளிப்படையாகவே அறிவித்து வருகிறது. மறுபுறம், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள், வெளிப்படையாக கூட்டணி ஆட்சி பற்றி கூற முடியாவிட்டாலும், இந்த முறை ஆட்சியில் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் காய்நகர்த்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்த 118 என்ற ‘மேஜிக்’ எண்ணை தி.மு.க. அடைய விடாமல் தடுக்க திட்டமிட்டு வருவது எதிர்க்கட்சிகள் அல்ல, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள்தான் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

தி.மு.க. 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், குறைந்தது 135 முதல் 140 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால், இம்முறை அவ்வளவு தொகுதிகளில் தி.மு.க.வை போட்டியிட விடக்கூடாது என்று கூட்டணி கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு, தங்களுக்கு தொகுதிகள் அதிகம் வேண்டும் என்று ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ‘சதி’ செய்வதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகள் திமுகவிடம் கேட்க திட்டமிட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை இதோ:

காங்கிரஸ் – 35 தொகுதிகள்

விடுதலைச் சிறுத்தைகள் – 30 தொகுதிகள்

ம.தி.மு.க – 12 தொகுதிகள்

இந்திய கம்யூனிஸ்ட் – 10 தொகுதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 10 தொகுதிகள்

மனிதநேய மக்கள் கட்சி – 4 தொகுதிகள்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி – 4 தொகுதிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 5 தொகுதிகள்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் – 10 தொகுதிகள்

இந்த கணக்குப்படி பார்த்தால் கூட்டணி கட்சிகளுக்கு 120 தொகுதிகளை கொடுக்க வேண்டிய நிலை திமுகவுக்கு உள்ளது. மீதமுள்ள 114 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட முடியும் என்றும், அதில் 80 முதல் 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும், தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒருங்கிணைந்து திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க. இதுவரை வரலாற்றிலேயே தனித்து போட்டியிட்டதில்லை என்பதால், கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக ஒருமித்த குரலில் தங்களுக்கு கேட்கும் தொகுதிகள் வேண்டும் என்று உறுதியாக இருந்தால், வேறு வழியின்றி தி.மு.க. விட்டுக்கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதே கூட்டணி கட்சிகளின் திட்டம் என்று சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கூட்டணி கட்சிகளின் இந்த ‘மிரட்டலுக்கு’ தி.மு.க. பயப்படுமா, கூட்டணி ஆட்சிக்கு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.