ஒரே சேலையை இருவரும் எடுத்ததால் பிரச்சனை.. தலைமுடியை பிடித்து சண்டை போட்ட பெண்கள்..!

Published:

ஒரே சேலையை இருவரும் தேர்வு செய்து அந்த சேலை தனக்குத்தான் வேண்டும் என இரண்டு பெண்கள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து இறுதியில் தலை முடியை பிடித்துக் கொண்டு ஜவுளிக்கடையில் சண்டை போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

நேற்று அட்சய திருதியை முன்னிட்டு புது சேலை எடுக்க பல பெண்கள் பெங்களூரில் உள்ள முன்னணி ஜவுளிக்கடை ஒன்றில் கூடி இருந்தனர். நேற்றைய தினம் தள்ளுபடி போடப்பட்டிருந்ததை அடுத்து ஏராளமான பெண்கள் தங்களுக்கு பிடித்தமான சேலைகளை அந்த கடையில் வாங்கிக் கொண்டிருந்தனர்

saree fightஇந்த நிலையில் ஒரு சேலையை இரண்டு பெண்களும் தேர்வு செய்து அந்த சேலை தங்களுக்கு தான் வேண்டும் என ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்தனர். இருதரப்பின் உறவினர்களும் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து போங்கள் என அறிவுரை கூறிய நிலையில் இருவருமே தனக்குத்தான் அந்த சேலை வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் இரண்டு பெண்களும் இறங்கினார். ஒருவரை உருவாக்கி தலைமுடியை பிடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் ஜவுளிக்கடை ஊழியர்கள் இரண்டு பெண்களையும் சமாதானம் செய்தனர். இருப்பினும் சமாதானம் ஆகாமல் அந்த பெண்கள் ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டது சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. நம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு சண்டை போட வேண்டிய நிலை இருக்கும் நிலையில் ஒரு சேலைக்காக இரண்டு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...