அனுபவம் புதுமை.. அவனிடம் கண்டேன்.. அதே 11A இருக்கையில் பயணம் செய்தேன்.. ஒரு விமான பயணியின் திகிலூட்டும் அனுபவம்..

  நெஞ்சை பிழியும் ஏர் இந்தியா விமான விபத்து நடந்து சில நாட்கள்தான் ஆகிறது. அந்த பெரும் சோகத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி அமர்ந்திருந்த அதே ‘அதிர்ஷ்ட’ இருக்கையான 11A-யில் தானும்…

11a

 

நெஞ்சை பிழியும் ஏர் இந்தியா விமான விபத்து நடந்து சில நாட்கள்தான் ஆகிறது. அந்த பெரும் சோகத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி அமர்ந்திருந்த அதே ‘அதிர்ஷ்ட’ இருக்கையான 11A-யில் தானும் அமர்ந்து அகமதாபாத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ததாக ஒரு பயணி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ, இணையத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. வைரலான இந்த வீடியோ, சுமார் 11 மணி நேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. அதன் தலைப்பு, “ஒரு மின்னல் இரண்டு முறை தாக்காது என்பார்கள். ஆனால், அகமதாபாத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏறி, சில நாட்களுக்கு முன்பு நடந்த துயரத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி அமர்ந்திருந்த அதே 11A இருக்கையில் நான் அமர்ந்தபோது, என் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. இன்று, அந்த இருக்கை என்னையும் பத்திரமாக சுமந்து சென்றது. பாதுகாப்பாக, பணிவுடன், ஒவ்வொரு பயணமும் ஒரு கதையை கொண்டுள்ளது என்பதை இது நினைவூட்டியது.” என்று பதிவு செய்துள்ளார்.

விபத்து நடந்து சில நாட்களுக்கு பிறகு அதே துயரம் மீண்டும் நிகழ வாய்ப்பில்லை என்றாலும், அந்த பயணிக்கு பதற்றம் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. விமானம் பத்திரமாக தரையிறங்கிய பின்னரே அவருக்கு நிம்மதி கிடைத்தது.

ஏர் இந்தியா விமான விபத்து, விமானத் துறையின் பாதுகாப்பு தரங்கள் மீது பெரும் கவனத்தை கொண்டு வந்தது மட்டுமல்லாமல், பல ஏர் இந்தியா போயிங் விமானங்களின் பிரச்சினைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த விபத்தை தொடர்ந்து, போயிங் ட்ரீம்லைனர்ஸ் விமானங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஏர் இந்தியா தனது சர்வதேச சேவைகளை 15% குறைத்துள்ளது.

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றில் இத்தகைய கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் சூழலில், ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான அகமதாபாத் நகரத்திற்கே, அதுவும் அதே ஏர் இந்தியா விமானத்தில், அதுவும் அதே ’11A’ இருக்கையில் ஒரு பயணி பயணம் செய்ய முடிவெடுத்தது, சற்றும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாகும்.

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதே இருக்கையான 11A-யில் அமர்ந்திருந்த ஒரு தாய்லாந்து பாடகர், 1998-ல் நடந்த ஒரு விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்த இதே போன்ற ஒரு கதை வெளிவந்தது. இது மக்களை மேலும் திகைக்க வைத்தது.