10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு செய்யாததை 10 நாட்களில் செய்த பாஜக அரசு.. சுத்தமாகிறது யமுனை..!

  யமுனை நதியை சுத்தம் செய்வதாக கடந்த ஆம் ஆத்மி அரசு 10 ஆண்டுகளாக நாட்களை கடத்திக் கொண்டிருந்த நிலையில், பாஜக அரசு பொறுப்பேற்ற பத்து நாட்களில் யமுனை நதியிலிருந்து 1300 மெட்ரிக் டன்…

yamuna

 

யமுனை நதியை சுத்தம் செய்வதாக கடந்த ஆம் ஆத்மி அரசு 10 ஆண்டுகளாக நாட்களை கடத்திக் கொண்டிருந்த நிலையில், பாஜக அரசு பொறுப்பேற்ற பத்து நாட்களில் யமுனை நதியிலிருந்து 1300 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, பாஜக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று யமுனை நதி சுத்தப்படுத்தப்படும் என்பதுதான். சமீபத்தில் கூட டெல்லி முதல்வர் யமுனை நதி சுத்தப்படுத்தி அதில் படகுச்சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது யமுனை நதியை சுத்தப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கடந்த 10 நாட்களில் மட்டும் 1300 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

யமுனை ஆற்றில் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை கட்டுப்படுத்த 18 முக்கிய கால்வாய்களுக்கு அருகில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக யமுனை நதியின் தூய்மை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய அரசுகள் யமுனை நதியை தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு செய்யாததை, பாஜக அரசு 10 நாட்களில் செய்து முடித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து, டெல்லி மக்கள் ஒரு தூய்மையான யமுனை நதியை விரைவில் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.