அதிமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து வரும் 2026 தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தொகுதி உடன்பாடு மற்றும் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் விஜய் துணை முதல்வர் வேட்பாளர் என, ஆந்திரப் பிரதேசம் பாணியில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால், விஜய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், 2026 தேர்தலில் ஜெயித்தால், எடப்பாடி பழனிச்சாமி இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகிக்க, விஜய் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என தவெக தரப்பிலிருந்து நிபந்தனை வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, இரு கட்சிகளும் தலா 117 இடங்களில் போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், துணை முதல்வர் பதவி வேண்டாம், அதற்கு பதிலாக இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வேண்டும் என்ற விஜய்யின் கோரிக்கைக்கு, எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொள்வாரா? அல்லது மீண்டும் வேறு வகையான பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.