வாவ்!!! உங்களிடம் உள்ள சாதாரண குர்தியை சூப்பர் குர்தி ஆக்கும் 6 ஐடியாக்கள்..

Published:

பெண்கள் மிகவும் சௌகரியமாக உணரக்கூடிய ஒரு உடை தான் குர்தி. கல்லூரி, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு, பிறந்தநாள் விழாக்கள், ஷாப்பிங் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு பெண்களின் தேர்வு குர்தி தான்.

ஆனால் குர்தியை ஒரே விதமாக அணியும் பொழுது பெண்களுக்கு சலிப்பு தட்டி விடுகிறது. புதிது புதிதாக குர்திகளை வாங்கி வைக்கவும் முடியாது பழைய குர்தியை தூக்கிப் போடவும் மனம் வராது. உங்களிடம் உள்ள ஒரே குர்தியை பல்வேறு விதமாக நீங்கள் அணிந்து கொள்ளலாம். அந்த குர்திக்கு ஏற்ப நீங்கள் சிறிதளவே உடுத்தும் விதத்தில் மாற்றம் செய்தால் அந்த குர்தியின் லுக்கே மாறிவிடும்.

வெள்ளை குர்தியும் ஜீனும்:

jean

உங்களிடம் வெள்ளை நிற குர்தி ஒன்றே ஒன்று இருந்தால் போதும். அந்த குர்தியை நீங்கள் பல்வேறு விதமாக ஸ்டைல் செய்ய முடியும். கருப்பு, பிங்க் போன்ற நிறங்களில் லெகின், பட்டியாலா, பலாசோ, ஸ்கர்ட் என்று அந்த குர்திக்கு லுக் தரலாம். ஆனால் இவை அனைத்தையும் விட வெள்ளை நிற குர்திக்கு ஜீன் அணியும் பொழுது கூடுதல் அழகை தருகிறது. தன்னம்பிக்கை நிறைந்த ஒரு தோற்றம் கிடைக்கிறது.

பிளைன் குர்த்தியும் வேலைப்பாடு நிறைந்த துப்பட்டாவும்: 

printed shawl

துப்பட்டா ஒரு குர்தியை எடுப்பாக காட்டக்கூடிய ஒன்று. சாதாரண பிளைன் குர்தியுடன் பிரிண்டட் துப்பட்டாவோ அல்லது வேலைப்பாடுகள் உள்ள துப்பட்டாவையோ அணியும் பொழுது அந்த குர்திக்கு கிராண்ட் லுக் கிடைக்கும். குர்தி மற்றும் துப்பட்டாவிற்கு தகுந்தார் போல் கழுத்தை சுற்றி அணிதல் ஒரு புறமாய் அணிதல் என்று துப்பட்டாவை அணியும் விதத்திலும் கவனம் செலுத்தினால் கூடுதல் அழகு. ஏதேனும் விழாக்களுக்கு செல்லும்பொழுது கூட இதுபோன்ற துப்பட்டா மற்றும் குர்தி அணிந்து செல்லலாம். 

குர்தி மற்றும் ஜாக்கெட்:

jacket

குருதியின் மேல் சிறிய ஜாக்கெட் அல்லது கோட் அணிவது  நல்ல தோற்றம் தரும். கல்லூரிகளுக்கு இதுபோல் அணிந்து சென்றால் தனித்து தெரியலாம். ஜீன் ஜாக்கெட், வேலைப்பாடுகள் உள்ள ஜாக்கெட், பிளைன் ஜாக்கெட் இப்படி குர்திக்கு தகுந்தார் போல் ஜாக்கெட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டால் உங்கள் தோற்றத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

குர்தி மற்றும் நீண்ட ஸ்கர்ட்:

skirt 1

நீண்ட ஸ்கர்ட் அணிந்து குர்தி அணியும் பொழுது அது ட்ரடிஷனல் கலந்த லுக் தரும். தற்பொழுது இளம் பெண்கள் அதிகம் தேர்வு செய்வது இந்த தோற்றத்தை தான். ஏ லைன் குர்திகளுக்கு ஸ்கர்ட் மிகவும் நல்ல பொருத்தமான தேர்வு.

பலாசோ பேன்ட்:

Palazzo

60களில் மிகவும் பிரபலமாக இருந்து ஃபேஷன் உலகை பாராட்ட வைத்த பலாசோ பேண்ட் மீண்டும் களம் இறங்கி இளம்பெண்கள் இடையே பிரபலமடைந்து உள்ளது. பெரும்பாலான கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களின் தேர்வாக பலாசோ உள்ளது. ஒரு எளிமையான குர்தியுடன் பலாசோ பேண்டும் அதற்கு தகுந்தார் போல் காலணிகளும் அணிந்து கொண்டால் நல்ல தோற்றம் கிடைக்கிறது.

குர்தி மற்றும் நீளமான கோட்:

long Jacket

உங்களிடம் உள்ள ஒரு பழைய குர்திக்கு ஒரு மாடன் லுக் தர விரும்பினால் அதனுடன் ஒரு நீளமான கோட் அணிந்தால் போதும். எளிமையான கோட்டோ அல்லது பிரிண்ட் வேலை செய்யப்பட்ட கோட்டோ எதுவாக இருந்தாலும் குர்திக்கு மிக நல்ல லுக் தரும்.

மேலும் உங்களுக்காக...