இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்.. கையை விட்டு போகும் கோப்பை..!

Published:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. ஸ்டீவ் சுமித் மற்றும் ஹெட் ஆகிய இருவரும் அபார சதம் அடித்ததன் காரணமாக ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா இன்று தனது முதல் இன்னிசை தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரே, விராட் கோலி ஆகியோர் மிகக்குறைந்த ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஹானே மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி 96 ரன்கள் எடுத்து 373 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் இந்திய அணி ஃபாலோ ஆன் வாங்க கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்திய அணியின் கையை விட்டு நழுவி உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை சென்று விட்டதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டி விளையாடி அதிக நாட்கள் ஆகிவிட்டதால் பொறுமையாக விளையாடும் நிலையை மறந்து விட்டனர் போல் தெரிகிறது.

ஸ்மித் மற்றும் ஹெட் ஆகிய இருவரும் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை 469 என உயர்த்திய நிலையில் இந்திய அணிக்கு அதுபோன்று பேட்ஸ்மேன்கள் யாராவது விளையாடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரகானே மற்றும் ஜடேஜா இருவரும் அவுட் ஆகிவிட்டால் அதன் பின்னர் முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பதால் இருவரை நம்பி மட்டுமே தற்போது அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...