முதலில் கமலுக்கு விரோதியே இந்த நடிகர்தானாம்.. செட்டில் அந்த நடிகரின் பெயரை சொல்லி கடுப்பேத்திய பாலசந்தர்!

Published:

தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன்.பாலசந்தருக்கு ஆஸ்தான நடிகராக இருந்தவர் கமல். சினிமாவில் இந்தளவு வெற்றியை கமலால் பெற முடிந்தது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாலசந்தர்தான்.

எப்பொழுதும் பாலசந்தரை கமல் தன்னுடைய குருவாகவே பாவித்து வந்தார். எந்த மேடையானாலும் பாலசந்தரை பற்றி பேசாமல் இறங்கவே மாட்டார் கமல். கமலை வைத்து ஏகப்பட்ட வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார் பாலசந்தர். அவரின் இயக்கத்தில் கமல் நடிப்பில் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை போன்ற பல முத்தான படங்களை கொடுத்திருக்கிறார் பாலசந்தர்.

தமிழ் சினிமாவில் இருவருக்கும் ஒரு அன்பையும் தாண்டி நல்ல நெருக்கமும் இருந்தன. பாலசந்தர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 28 படங்களில் நடித்திருக்கிறார் கமல். இந்த நிலையில் கமலுக்கும் பாலசந்தருக்கும் இடையே இருந்த இணக்கத்தை மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

முதலில் கமல் படங்களில் நடிக்கும் போது 3 டேக்குகள் எடுத்து நடிப்பாராம். அப்போது பாலசந்தர் கமலை பார்த்து ‘எரும எரும நல்லா நடிக்க மாட்ட, இதுவே நாகேஷாக இருந்தால் ஒரே டேக்கில் நடிச்சு முடிச்சிருப்பான்’ என்று நாகேஷுடன் ஒப்பிட்டே கமலை சத்தம் போடுவாராம்.

அப்போது கமல் கடுப்பில் ‘யாருடா அந்த நாகேஷ்? அவன் மட்டும் என் கையில் கிடைச்சா’என்று கிண்டல் கலந்த கடுப்பில் முணங்கிக் கொண்டு இருப்பாராம். அதன் பின் ஒரு படத்தில் கமலுடன் நாகேஷ் இணைந்து நடிக்கும் போதுதான் கமலுக்கு நாகேஷின் நடிப்பு புரிந்ததாம். மேலும் பாலசந்தர் சொன்னதும் சரிதான் என்றும் நினைத்தாராம். அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் கமல் நாகேஷ் கூட்டணியை நாம் பார்க்க முடிந்தது.

மேலும் உங்களுக்காக...