உறவுகளுக்குள் திருமணம் செய்யலாமா? பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா?

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதை பார்த்துப் பார்த்து நல்ல இடத்தில் வரன் பார்த்து நடத்துவார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு வரும் வரனால் எந்தவித சிக்கலும் வந்துவிடக்கூடாதுன்னு தீர விசாரிப்பார்கள். இதில் இடைத்தரகர்கள் கூட…

marriage

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதை பார்த்துப் பார்த்து நல்ல இடத்தில் வரன் பார்த்து நடத்துவார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு வரும் வரனால் எந்தவித சிக்கலும் வந்துவிடக்கூடாதுன்னு தீர விசாரிப்பார்கள். இதில் இடைத்தரகர்கள் கூட ஏதாவது ஒன்றிரண்டு சேர்த்து சொல்லி இருப்பார்கள் என கருதி சம்பந்தப்பட்டவர்களே நேரில் சென்று விசாரிப்பதும் உண்டு.

இன்னும் சிலரோல உறவைத் தக்க வைக்க வேண்டும் என்றும் அது நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் என்று உறவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து முடித்துக் கொள்வார்கள். இப்படி செய்வது பிறக்கும் குழந்தையைப் பாதிக்குமா? வாங்க பார்க்கலாம்.

உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது நாம் உண்ணும் உணவில் கீரையைச் சேர்த்துக் கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் கண் பார்வை கோளாறுகளை தடுக்கலாம்.

இன்றும் கிராமங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல் படிப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே..

ஆனால் இன்று இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்கிறோம். அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள், சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப் பெட்டி, கணினி என பட்டியல் நீளும்.

கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம். உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது. கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.

உறவுகளுக்குள் திருமணம் செய்யும்போது அது பிறக்கும் குழந்தைகளைப் பாதிப்பது என்பது அந்த பரம்பரையில் உள்ள குறைபாடுகளைப் பொருத்த விஷயம். மற்றபடி அவர்கள் ஆரோக்கியமாக இருந்து இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.