இன்று பெரும்பாலான குடும்பத்தில் பிளவு உண்டாக மூலகாரணமே படுக்கையில் தோற்பதுதான். படுக்கை அறையில் மனைவியை குஜால்படுத்த கணவன்மார்கள் அவசியம் இதுபோன்ற சங்கதிகள்ல ஈடுபடுங்க. வாங்க ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மனைவி ஆசையோடு வருகையில் வேலை ரொம்ப இருக்குன்னு பிகு பண்ணாதீங்க. அப்புறம் ஆபீஸ்சுக்கும், படுக்கை அறைக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும். படுக்கை அறையை காடு மாதிரி ஆக்கிடாதீங்க. அங்கே இரை கிடைச்சிடுச்சுன்னு வேட்டையாடுற மாதிரி புகுந்து விளையாடக் கூடாது. மென்மையான அணுகுமுறை தான் பெண்களுக்குப் பிடிக்கும்.
நறுமணம் கமழ படுக்கை அறைக்குச் செல்லுங்கள். சிகரெட், பீடி, மது வாடைக்கு அனுமதி இல்லை. வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள். அவசர கதியில் வந்தோம். வேலையை முடிச்சோம்னு போய்க்கிட்டே இருக்காதீங்க. அதைப் பெண்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.
படுக்கை அறையில் சிறந்த முறையில் மனைவி ஒத்துழைத்தால் அன்பாக நெற்றியில் ஒரு முத்தம் இடுங்கள். மார்பில் சாய்ந்து செல்லமாய் ஒரு குட்டித்தூக்கம், தலைகோதி விடுவது என சின்ன சின்ன ரொமான்ஸ்களைச் செய்யுங்கள். அதைத்தான் 100 சதவீத பெண்களும் விரும்புகிறார்கள்.
கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம் கலந்து மனைவியைத் தொடுங்கள். இதுதான் அவர்களது உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். படுக்கை அறையில் போய் பட்ஜெட் கணக்குப் போடாதீர்கள். அங்கு அதைப் பேசினால் உங்களுக்குள் சண்டைதான் வரும்.
இது தெரியாமல் எங்க குடும்பத்துல நிம்மதியே இல்லை. எப்ப பார்த்தாலும் ஒரே சண்டைதான். மனைவி என்னை புரிஞ்சுக்கவே இல்லை. அப்படி இப்படின்னு பல கணவன்மார்கள் குறை சொல்வதைப் பார்த்திருப்போம். மேலே சொன்னபடி உங்க வேலையைக் கனகச்சிதமாக செய்யுங்க. அப்புறம் வீட்டுல மட்டும் இல்ல. எப்பவுமே நீங்கதான் ராஜா.