பல்கலை மாணவர்கள் ஹாஸ்டலில் மாணவிகள்.. ஒரே ஒரு பீர் பாட்டில் தான் லஞ்சம்..!

  இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் மாணவர் ஹாஸ்டலில் மாணவிகள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றனர் என்றும் இதற்காக வாட்ச்மேன்களிடம் ஒரே ஒரு பீர் பாட்டில் மட்டுமே லஞ்சமாக கொடுக்கப்படுகிறது என்றும் கூறப்படும் தகவல்…

hostel

 

இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் மாணவர் ஹாஸ்டலில் மாணவிகள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றனர் என்றும் இதற்காக வாட்ச்மேன்களிடம் ஒரே ஒரு பீர் பாட்டில் மட்டுமே லஞ்சமாக கொடுக்கப்படுகிறது என்றும் கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஒரு வீடியோவை இணையதளங்களில் வைரலான நிலையில் ஒரு மாணவர் தனது காதலியுடன் ஜாலியாக இருப்பதற்காக பல இடங்களை தேடியதாகவும், ஆனால் எந்த இடமும் கிடைக்காததை அடுத்து ஒரே ஒரு பீர் பாட்டில் வாங்கி ஹாஸ்டல் வாட்ச்மேனுக்கு கொடுத்த நிலையில் அவர் தனக்காக கதவை திறந்து காதலியுடன் செல்ல அனுமதிப்பதாகவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் இன்னொரு முன்னணி பல்கலைக்கழக ஹாஸ்டலில் இருந்து மாணவி ஒருவர் வெளியே வருவது போன்ற வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது மாணவிகளின் செக்ஸ் சுதந்திரம் என்றும் தற்போதைய கலாச்சாரம் என்றும் சில கூறினாலும் ஒரு ஒரு மாணவனின் அறைக்கு ஒரு மாணவி சென்றால் அது செக்ஸ்காக தான் என்று ஏன் நினைக்க வேண்டும்? நட்பு ரீதியில் உரையாட கூட சென்றிருக்கலாம் என்றும் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் காதலர்கள் தனிமையில் இருப்பதற்காக இடத்தை தேடி அலைகிறார்கள் என்பது போன்ற தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல ஹாஸ்டல்களில் தற்போது சிசிடிவி கேமராக்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் அங்கு தங்கள் காதலிகளை அழைத்துச் செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தனியார் ஹோட்டல் விடுதிகள் இந்த மாதிரியான காதலர்களுக்கு உதவும் வகையில் சிறிய அறைகளை ஏற்பாடு செய்து உதவுகின்றனர் என்றும் ஆனால் அங்கேயும் இப்போது கொஞ்சம் கட்டுப்பாடுகள் அதிகமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலை நாடுகளில் உள்ளது போல் தற்போது இந்தியாவிலும் செக்ஸ் பற்றிய சுதந்திரம் அதிகமாகி விட்டது என்றும் பெண்கள் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவதை விரும்புகிறார்கள் என்றும் நாட்டின் கலாச்சாரமே மாறிவிட்டது என்றும் இந்த தகவல்களுக்கு பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.