கைக்கு வந்த 6 கோடி ரூபாய் போச்சா? தமன்னாவை நீக்குகிறதா மைசூர் சாண்டல் சோப்?

  கர்நாடகாவின் அடையாளமாக கருதப்படும் மைசூர் சாண்டல் சோப்புக்கு, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் புகழ்பெற்ற தமன்னாவை பிராண்ட் அம்பாசடராக நியமித்திருப்பதை தொடர்ந்து, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த கர்நாடக தொழில்துறை அமைச்சர்…

tamannah

 

கர்நாடகாவின் அடையாளமாக கருதப்படும் மைசூர் சாண்டல் சோப்புக்கு, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் புகழ்பெற்ற தமன்னாவை பிராண்ட் அம்பாசடராக நியமித்திருப்பதை தொடர்ந்து, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், இது “ஒரு வணிக தந்திரம்” எனவும், “கர்நாடக அடையாளம் தொடர்பான விஷயமல்ல” என்றும் கூறியுள்ளார்.

கர்நாடகா சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்ட்கள் லிமிடெட் என்பது ஒரு அரசு நிறுவனம். இந்நிறுவனம் நடிகை தமன்னாவை 2 ஆண்டுகளுக்கு ரூ.6.2 கோடியில் பிராண்ட் அம்பாசடராக நியமித்தது. மும்பையில் பிறந்த 35 வயதான தமன்னா, ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் மக்களிடையே பரிச்சயமான முகமாக இருக்கிறார்.

தமன்னாவுக்கு 2.8 கோடி இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார். மைசூர் சாண்டல் சோப்பு வெறும் கர்நாடகாவில்தான் விற்பனையாகும் எனில், ஒரு கர்நாடக நடிகையை நியமித்திருப்போம், ஆனால் மைசூர் சாண்டல் சோப்பின் 18 சதவீதம் மட்டுமே கர்நாடகாவில் விற்பனையாகிறது. மீதமுள்ள 82 சதவீதம் மற்ற தென்னிந்திய மாநிலங்களில், வட இந்திய மாநிலங்களில் விற்பனை ஆகிறது. மேலும் சர்வதேச சந்தையிலும் நாம் செல்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை இது,” எனவும் கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் விளக்கியுள்ளார்.

இந்நிலையில், பல கர்நாடக ஆதரவு அமைப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள், “மாநில அடையாளமாக இருக்கும் ஒரு பிராண்ட்டிற்கு, கர்நாடக நடிகையை ஒப்பந்தம் செய்யாமல் வேறு மாநில நடிகையை தேர்வு செய்வது தவறு” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர், கர்நாடக நடிகைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, அரசை நிலை மாற்ற அழுத்தி வருகின்றனர்.

தமன்னாவின் நியமனத்தை நீக்க வலியுறுத்தும் போராட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்றன. இதனால் தமன்னா அம்பாசிடர் பதவியில் இருந்து மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.