ஜம்மு காஷ்மீர் அரசு, பதெர்வா, தோடா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இன்று முதல் மே 27-ஆம் தேதி வரை மொபைல் இணைய சேவையை தற்காலிகமாக நிறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு மண்டல ஐ.ஜி.பி. பீம் சேன் டூட்டியின் பரிந்துரையின் பேரில், ரிலையன்ஸ் ஜியோவின் 19 மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் 18 டவர்கள் என மொத்தம் 37 டவர்களில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
உள்துறைசெயலர் சந்திரேகர் பார்தி வெளியிட்ட உத்தரவில், மே 22 மாலை 8 மணி முதல் மே 27 மாலை 8 மணி வரை இந்த இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு மண்டல ஐ.ஜி.பி., தொலைத்தொடர்பு சேவைத் தடை விதிகளின் கீழ், அதிகாரம் பெற்றவர் என்பதால், மொபைல் தரவுத் தொடர்புகள் (2G/3G/4G/5G) மற்றும் பொது வைபை சேவைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்,” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
“தேசிய விரோத சக்திகள் அல்லது தொல்லை உருவாக்கும் சக்திகள், இணைய சேவையை பயன்படுத்தி ஒற்றுமையை குலைக்க முயற்சிக்கலாம் என்பதாலே, இந்தத் தடை அவசியமாகும்” என்றும், இது யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.