ஸ்ரீநகரில் இருந்து சென்ற விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி.. 227 பேர் என்ன ஆனார்கள்?

  டெல்லியில் இருந்து 227 பயணிகளுடன் ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், இன்று மாலை வானில் பயணிக்கும்போது மழை மற்றும் வானிலை மாறுபாட்டால் திடீரென காற்றழுத்தக் கோளாறை சந்தித்தது. இதையடுத்து, விமானப் பைலட்…

flight1

 

டெல்லியில் இருந்து 227 பயணிகளுடன் ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், இன்று மாலை வானில் பயணிக்கும்போது மழை மற்றும் வானிலை மாறுபாட்டால் திடீரென காற்றழுத்தக் கோளாறை சந்தித்தது.

இதையடுத்து, விமானப் பைலட் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு ‘அவசரநிலை’ அறிவித்தார். அதன்பின் விமானம் மாலை 6:30 மணிக்கு ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில், விமானத்தின் முன்பக்கம் சேதமடைந்தது, இதனை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் அந்த விமானத்தை “Aircraft on Ground” என அறிவித்துள்ளது, அதாவது பறக்க இயலாத நிலையை அடைந்ததாக அறிவித்தது.

விமான பயணத்தின் போது ஏற்பட்ட திடீர் இடர்பாடிலும், விமானிகள் பாதுகாப்பாக தரையிறங்க செய்தது விமானியின் ஒரு திறமையான நடவடிக்கை என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கியுள்ளது.

முன்னதாக விமானம் புயல் காற்று அழுத்தம் காரணமாக ஆடத் தொடங்கியதும் உள்ளே இருந்த 227 பயணிகள் அச்சத்தால் நடுநடுங்கினர். அவர்களது அபய குரல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோவை பார்க்கும் போது அவர்கள் ஒவ்வொருவரும் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு இருந்ததாகவும் எப்படியாவது எங்களை காப்பாற்றுங்கள் என்று வழிபாடு நடத்திக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து தான் விமானி மிக சிறப்பாக செயல்பட்டு இக்கட்டான நேரத்திலும் பயணிகள் அனைவரையும் காப்பாற்றி உள்ளதை அடுத்து ஒவ்வொரு பயணியும் விமானம் தரை இயங்கிய பிறகு கேப்டனுக்கு நன்றியை சொல்லிவிட்டு தான் வீட்டுக்கு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.