லக்னோ நீதிமன்றம் நேற்று 25 ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீரியல் கொலைகாரர் ராம் நிரஞ்சன் அலையாச் ராஜா கொலந்தர் என்பவருக்கு ஆயுள் தண்டனையை விதித்தது.
2000 ஆம் ஆண்டு ஜனவரியில், மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது டிரைவர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், ராஜா கொலந்தரும், அவரது மைத்துனரான வக்ஷ்ராஜ் ஆகியோரும் குற்றவாளிகள் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
லக்னோவின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தது.
2000 ஜனவரி 24-ம் தேதி, மனோஜ் மற்றும் ரவி, லக்னோவிலிருந்து ரீவா நோக்கி டாடா சுமோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, சார்பாக் ரயில் நிலையத்தில் ராஜா கொலந்தரால் கொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சில நாட்கள் கழித்து இருவரின் உடல்கள் நிர்வாணமாகவும் துண்டிக்கப்பட்ட நிலையில், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஷங்கர்கட்ஹ் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
2001-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபோதும், வழக்கு பெரிதாக நகரவில்லை.
2013-ல், மற்றொரு கொலை விசாரணையின் போது கிடைத்த புதிய தகவலால், இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றது.
பத்திரிகையாளர் திரேந்திர சிங்கின் தலையறுத்த உடல் மீட்கப்பட்ட வழக்கின் மூலம், ராஜா கொலந்தரின் கொடூரம் முழுமையாக வெளிச்சத்துக்கு வந்தது.
கொலந்தரின் பண்ணையில் மனித எலும்பு கூடுகள், கொல்லப்பட்டவர்களின் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனித மூளை சாப்பிட்டால் புத்திசாலித்தனம் கூடும் என நம்பி கொலை செய்ததாக போலீசில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் அரசு ஊழியரான கொலந்தருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்ததால், அந்த அரசியல் பின்னணியை பயன்படுத்தியுள்ளார்.
கொலந்தர், நீதிமன்றத்தில் தன்னை அரசியல் சதி என கூறியபோதும், அதற்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் அவர் கூறியதை உறுதிப்படுத்தவில்லை.
2012-ல் பத்திரிகையாளர் திரேந்திர சிங்கை கொன்ற வழக்கில் முதன்முதலில் தண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது இரட்டை கொலை வழக்கிலும் ஆயுள் தண்டனை என தண்டிக்கப்பட்டுள்ளார். இரு தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொடூர வழக்கு, Netflix-இன் “Indian Predator: The Diary of a Serial Killer” என்ற தொடரில் இடம்பெற்று, உளவியல் மற்றும் சடங்கு கொலைகள் குறித்து வெளிச்சமிட்டது.
இந்த தீர்ப்பு, உத்தரப்பிரதேசத்தின் வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றச்செயல் தொடருக்கு ஒரு பகுதிக்கான முடிவை வழங்குகிறது.