வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!

வாழ்க்கையில் எந்த வழியிலாவது நாம் முன்னேறி விட மாட்டோமா? நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வராதா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எதைக் கடைபிடிப்பது என்று…

வாழ்க்கையில் எந்த வழியிலாவது நாம் முன்னேறி விட மாட்டோமா? நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வராதா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எதைக் கடைபிடிப்பது என்று பார்க்கலாமா…

மலையளவு பெறுவதற்கு போராடு.கடுகளவு கிடைத்தாலும் கொண்டாடு. சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. வலிகளை காட்டிக் கொள்ள விருப்பம் இல்லை என்று அர்த்தம். நிம்மதி வேண்டும் என்று தேடுகிறோமே தவிர ஆசைகளைக் கைவிட யாரும் நினைப்பதில்லை, ஆசைகளை விட்டுவிடுங்கள் நிம்மதி தானாகக் கிடைக்கும். மனிதனுக்கு ஆசை அவன் ஒழியும் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

மனிதன் ஆசாபாசங்களில் எளிதில் சிக்கி விடுகிறான் அது அவனை குலைத்துக் குன்றி விடுகிறது.  ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. பொறாமை, கோபம் எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.

ஒருவரை குறை கூறும் முன் ஒரு முறை அவர்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்து பாருங்கள், யாரையும் குறை சொல்ல தோன்றாது. சந்தர்ப்பம் வரும் என  வாளாவிருக்கக்  கூடாது. சந்திக்கும் நேரங்களைச் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் மனதை திறந்து படிக்க நினைப்பதை விட உணர்ந்து படிக்க நினைத்தாலே போதும் அழகாய் புரிந்து விடும். அடுத்தவன் கஷ்டத்தில் இருந்தால் கவலைப் படு. அவனுக்குஉதவி செய். ஆனால் குறை சொல்லாதே கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..அது இரவில் கவலையை உண்டாக்கும். பகலில் தலை குனிவை உண்டாக்கும்..வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது. அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்.