மெட்ரோ ரயில்கள் சினிமா செட் அல்ல.. ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை.. பயணிகளுக்கு எச்சரிக்கை..!

  டெல்லி மெட்ரோவில் சமூக ஊடகப் பிரபலங்கள் வீடியோக்கள் மற்றும் “ரீல்ஸ்” எடுத்து இணையதளங்களில் வைரலாகப் பரவுவதைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் கழகம் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளை வெளியிட்டது. அதில்,…

metro

 

டெல்லி மெட்ரோவில் சமூக ஊடகப் பிரபலங்கள் வீடியோக்கள் மற்றும் “ரீல்ஸ்” எடுத்து இணையதளங்களில் வைரலாகப் பரவுவதைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் கழகம் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளை வெளியிட்டது. அதில், பயணிகள் மெட்ரோ ரயில்களை சினிமா ஸெட்டாக மாற்றுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மிகவும் காட்டமான மொழியில் டெல்லி மெட்ரோ வெளியிட்ட அறிவிப்பில், பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் தடையில்லா முறையில் பயன்படுத்தும்படி பயணிகளுக்கு தெரிவித்தது.

“மெட்ரோ பயணத்துக்காக மட்டுமே, பிரபலமடைவதற்காக அல்ல. அடுத்த முறை ரீல் எடுக்க நினைக்கும்போது நிம்மதியான, பாதுகாப்பான பயணம் ஒரு சில விநாடிகள் புகழைப் பெறுவதைவிட முக்கியம்,” என்று X (முந்தைய Twitter) வலைத்தளத்தில் DMRC பதிவு செய்துள்ளது.

இந்த பதிவுடன் “No Reels on the Wheels” என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டர் இணைக்கப்பட்டிருந்தது.

ஒரு போஸ்டரில், மெட்ரோ நிலையத்தில் கீதார் வாசிக்கும் ஒருவரை காட்டி, “உங்கள் கலைக்கு மெட்ரோவிற்கு மேல் மேடையே தேவை” என்ற வாசகம் இடப்பட்டது.

மற்றொரு போஸ்டரில், நடனமாடும் பெண்ணை காட்டி, “யாரும் பார்க்கவில்லை போல நடனமாடுங்கள் ஆனால் மெட்ரோவில் அல்ல” என்று எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலையங்கள் மற்றும் இயக்கத்தில் இருக்கும் ரயில்களில் வீடியோக்கள் எடுப்பது பயணிகளின் பாதுகாப்பையும், சீரான பயணத்தையும் பாதிக்கிறது.

இத்தகைய வீடியோ எடுக்கும்போது மற்ற பயணிகளை இடையூறும் செய்கிறது, ரயில் நிலையங்களில் சில சமயங்களில் பாதுகாப்புக்கே ஆபத்தாக மாறுகிறது. மிகவும் பரபரப்பான நேரங்களில் இந்த செயல்கள் பயணிகளுக்கு அதிகமான தொந்தரவுகள் ஏற்படுத்துகின்றன.

விழிப்புணர்வை அதிகரிக்க முக்கிய மெட்ரோ நிலையங்களில் இந்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் இந்த போஸ்டர்கள் “மெட்ரோவில் ரீல் எடுக்க வேண்டாம்” என்ற தெளிவான செய்தியை வழங்குகின்றன.

தற்போது, விழிப்புணர்வை மையமாகக் கொண்ட இந்த பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டெல்லி மெட்ரோ கழகம் எச்சரித்துள்ளது.