பெட்ரூம்ல  செய்ய வேண்டியதை ரோட்ல் செய்யுதுங்க.. பெட்ரோல் டேங்கில் படுத்து கொண்ட இளம்பெண்.. ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி.. அதிர்ச்சி வீடியோ..

  சமூக ஊடகங்கள் தான் வாழ்க்கையே என்று எண்ணும் இளைஞர்கள் வாழும் இந்த காலத்தில், லைக்ஸ் வாங்குவதற்கு எதற்கும் துணிபவர்கள் பலர். இதற்கு ஒரு உதாரணமாக, ஆக்ரா – கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு…

bike

 

சமூக ஊடகங்கள் தான் வாழ்க்கையே என்று எண்ணும் இளைஞர்கள் வாழும் இந்த காலத்தில், லைக்ஸ் வாங்குவதற்கு எதற்கும் துணிபவர்கள் பலர். இதற்கு ஒரு உதாரணமாக, ஆக்ரா – கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காதல் ஜோடி, அதிவேக பைக்கில் போக்குவரத்து விதிகளை அப்பட்டமாக மீறியதோடு, பொதுவெளியில் அநாகரீகமாக நடந்துகொண்டு, தங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த வீடியோவில், ஆக்ரா – கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காதல் ஜோடி ஒன்று பைக்கில் சாகசம் செய்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தின் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் இரவு 10 மணியளவில் இது நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைக்கை ஓட்டியவரும் சரி, பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் சரி, தலைக்கவசம் அணியாதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், பெண் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது படுத்திருக்க, ஆண் பைக்கை ஓட்டுகிறார். அவ்வழியே சென்ற ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். தன்னை படமெடுப்பதை உணர்ந்ததும், அந்தக் காதல் ஜோடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அப்போது வீடியோ எடுத்தவர்களில் ஒருவர், “ஒரு அறை வேண்டுமானால் கொடுக்கட்டுமா?” என்று கிண்டலாக கேட்க, பைக்கை ஓட்டியவர் “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதுவரை இந்தக் காதல் ஜோடி மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக எந்தத் தகவலும் இல்லை. இவர்களின் பொருத்தமற்ற செயலை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“பொறுமையாக இருங்கள், இந்த வீடியோவைப் பார்த்த பிறகு காவல்துறை சலான் போடும்” என்று ஒரு X பயனர் கருத்துத் தெரிவித்துள்ளார். “பண்பாடு பற்றிய அக்கறையும் இல்லை, பொது நாகரிகம் பற்றிய சிந்தனையும் இல்லை” என்று மற்றொருவர் சாடியுள்ளார். “காதல் செய்ய எல்லோருக்கும் நெடுஞ்சாலைதான் கண்ணுக்குத் தெரிகிறதா?” என்று மற்றொரு பயனர் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொரு பயனர் ‘பெட்ரூம்ல செய்ய வேண்டியதை ரோட்ல் செய்யுதுங்க’ என்று கடுமையாக விமர்சித்தார்.

இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. சில நாட்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவிலும் ஒரு காதல் ஜோடி இதேபோன்ற சாகசத்தை செய்தது. அந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலானது. அவ்வழியே சென்ற ஒருவரால் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஆண் தலைக்கவசம் அணியாமல் பைக்கை ஓட்ட, பெண் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து ஓட்டுநரை கட்டியணைத்தபடி சென்றது பதிவாகியிருந்தது. இந்த வீடியோ பரவலானதை தொடர்ந்து, அந்த பைக்கை ஓட்டியவருக்கு 53,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/Dharm03081987/status/1938829445953110323