2024–25 நிதியாண்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ₹2.68 லட்சம் கோடி லாபப் பகிர்வு (dividend) வழங்குவதாக அறிவித்துள்ளது. இது, மத்திய அரசு எதிர்பார்த்த ₹2.1 லட்சம் கோடியைவிட மிக அதிகம். Though brokerage நிறுவனம் Emkay Global எதிர்பார்த்த ₹3.2 லட்சம் கோடிக்கு குறைவாக இருந்தாலும், இது அரசுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியான நல்ல செய்தி!
இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமாக லாபம் கொடுக்கிறது. கடந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவுக்கே 2.6 மடங்கு அதிகமாக கொடுத்தது. இந்த ஆண்டு கூட, இது மொத்த ஜிஎடிபியின் 0.15% அளவுக்கு கூடுதல் நிதியாக அரசுக்கு கிடைக்கும்.
இந்த லாபம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் Emkay Global கூறும் மூன்று முக்கிய காரணங்களை பார்க்க வேண்டும்.
1. அதிக அளவு வெளிநாட்டு செலாவணி விற்பனை – FY25ல் $398 பில்லியன் விற்பனை லாபம் ).
2. அரசு பத்திரங்களில் அதிக வட்டி வருமானம்
3. அசெட் மதிப்பீட்டில் குறைந்த இழப்புகள்
இதனால்தான், ரிசர் வங்கி தனது அவசர நிதி காப்பீட்டு நிதியை (CRB) 6.5%-ல் இருந்து 7.5%-க்கு உயர்த்த முடிந்தது.
இந்த லாபம் காரணமாக பேங்கிங்அமைப்பில் பணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. FY26 முதல் காலாண்டில் ₹4–4.5 லட்சம் கோடி வரை லிக்யூடிட்டி இருக்கலாம் என Emkay மதிப்பீடு செய்கிறது.
இதற்கு காரணங்கள்:
அதிக லாபம்
பருவக் கால பணச்சுழற்சி குறைவு
RBI-யின் OMO (Open Market Operations)
ஆண்டின் முடிவில், வங்கித் தொகை NDTL-இன் 0.9–1.1% அளவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.