ஜான்வி கபூர், இஷான் கட்டர் மற்றும் விஷால் ஜெத்வா நடிப்பில் உருவான “Homebound” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. “Un Certain Regard” பிரிவில் வெளியான இந்த படம் கேன்ஸ் ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது.
அதன்பின் கேன்ஸ் விழாவில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், ஜான்வி தனது கதாபாத்திரமான “சுதா” பற்றி பேசினார். அவர் கூறுகையில், அந்தக் கதாபாத்திரத்தை சரியாக கையாண்டு செயல்படுத்த டாக்டர் அம்பேத்கரை பற்றி படித்ததாக தெரிவித்தார். படிக்கும்போது, அம்பேத்கர் சமுதாயத்துக்காக செய்த அனைத்தையும் விரும்பத் தொடங்கியதாக அவர் கூறினார்.
ஆனால், அவரது பேச்சு இணையவாசிகளுக்கு ட்ரோன் கண்டெண்ட் ஆனது. அவர் கூறிய தகவல்கள் ஆழமற்றவை என்றும், உண்மையிலேயே அம்பேத்கரின் சமூக சீர்திருத்த கொள்கைகள் குறித்து அவர் எதையும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லையென்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஜான்வி நேர்காணலில் கூறியது என்னவெனில் “சுதா” கேரக்டரில் நடிக்க நீரஜ் கெய்வான் வாய்ப்பு அளித்ததாகவும், அவர் மூலமாகவே சமூகத்தில் உள்ள பல விஷயங்கள் குறித்து புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். நான் சமூகப் படிநிலை பற்றி மிகக் குறைவாகத்தான் தெரிந்து கொண்டிருந்தேன். அது என்னை வெட்கப்பட வைத்தது. அதுவே என்னை தூண்டியது,” என்று அவர் கூறினார்.
பின்னர், கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட, தனது நம்பிக்கைக் கோட்பாடுகளை படித்து மேம்படுத்த வேண்டும் என அவர் முடிவு செய்து, அந்த முயற்சியில் அம்பேத்கரை பற்றி படித்ததாகவும், அவருடைய அரசியல் கொள்கைகளில் நிறைய அம்சங்கள் உள்ளன. அவர் சமூகத்துக்காக செய்த அனைத்தையும் நான் ஒத்துக்கொள்கிறேன். அவை என் நம்பிக்கைக்கே ஒத்தவை” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், “அவரது அரசியலில் நிறைய அம்சங்கள் உள்ளன”, “அவர் பல விஷயங்களை வலியுறுத்தியுள்ளார்”, “அவர் பல விஷயங்களைச் செய்துள்ளார்” போன்ற பொதுவான வார்த்தைகளையே ஜான்வி பயன்படுத்தியதை கவனித்த நெட்டிசன்கள்,
“எந்த அம்சம்?”, “என்ன விஷயங்கள்?”, “எந்த நம்பிக்கை அமைப்பு?” என்று கேள்விகள் எழுப்பினர்.
ஒரு பயனர் “அம்பேத்கரின் சீர்திருத்தக் கொள்கைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது போல. வெறும் வார்த்தைகளாக பேசுகிறார்.”
மேலும், இன்னொருவர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இஷான், விஷால் போன்றவர்கள் பாராட்டை பெற வேண்டிய நேரத்தில், சிறிய வேடமுள்ள ஜான்வி மீது மட்டுமே ஒளி வீசப்படுவது பதற்றம் தருகிறது.”
ஒரு நெட்டிசன் நகைச்சுவையாக, “ஜான்வி: நான் அம்பேத்கர் சமூகத்துக்காக செய்ததை எல்லாம் விரும்புகிறேன். நேர்காணலாளர்: ஒரு உதாரணம் சொல். ஜான்வி: என்ன?” என்று எழுதியுள்ளார்.
அதே நேரத்தில், சிலர் அவரது நேர்மையையும், சமூக அக்கறை குறித்த அவரின் செயலை பாராட்டினர். “சமுதாய அமைப்புகளைப் பற்றி அறியாமல் வளர்ந்ததை நேர்மையாக கூறியுள்ளார். இது பாராட்டுக்குரியது” எனவும் கருத்துகள் வந்துள்ளன.