சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் என்ஜினீயரை கழிவறைக்குள் தள்ளி அத்துமீறல்.. வெளியான புகைப்படம்

By Keerthana

Published:

சென்னை: கேரளாவில் இருந்து சென்னை சென்டிரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் என்ஜினீயரை கழிவறைக்குள் தள்ளி அத்துமீறலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறாாகள்.

கேரளாவில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 26-ந் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் முன்பதிவு பெட்டியில் பெண் என்ஜினீயர் ஒருவர் பயணம் செய்து வந்தார். இந்த ரயில் வேலூர் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள், திடீரென என்ஜினீயர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். உடனே அவர் பதற்றம் அடைந்து 2 பேரையும் விரட்டிச்சென்றிருக்கிறார்

அதற்குள் பெண் என்ஜினீயரை அந்த 2 பேரும் அருகில் இருந்த கழிவறைக்குள் தள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின்னர், ரயிலில் இருந்து குதித்து இருவரும் தப்பிச் சென்றுள்ளார்கள். இதில் நிலைகுலைந்த அந்த பெண், ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும், ரயில்வே எஸ்பி ஈஸ்வரனிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். மேலும், எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளின் விவரங்களையும் சேகரித்தனர்.

பெண் என்ஜினீயரின் புகாரையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்த போலீசார், ஒருவரின் புகைப்படத்தை அடையாளம் கண்டுள்ளனர்.அவரது புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் உங்களுக்காக...