மேயர் பிரியா ராஜன் vs பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?

Published:

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் இன்று ஆங்கில மொழி உச்சரிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மாநகராட்சி மேயர் பிரியா உடனடியாக பதில் அளித்தார். அதை பற்றி பார்ப்போம்.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தொடர் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று நடந்த. மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ் குமார், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். இன்றைய கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசும் போது,மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறார். இந்த உலகில் சில நாடுகளைத் தவிர பிரெஞ்சு மொழி பேசுவதில்லை . நாட்டின் பிற பகுதிகளிலும் மாணவர்கள் தொடர்பு கொள்ளவும், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும் உதவும் என்பதால் சென்னை மாநகராட்சி ஏன் ஹிந்தியைக் கற்பிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினார். மேலும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களும் ஆங்கில மொழியில் போதிய மதிப்பெண் பெற முடியவிலலை என்று உமா ஆனந்தன் குற்றம் சாட்டினார்.

இதற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பதில் அளித்து பேசுகையில், ஸ்கில் டெவலப்மெண்ட் முக்கியம், தமிழ் முக்கியம், ஆங்கிலம் முக்கியம், பிரெஞ்சு மொழியை கூடுதலாக கற்பிக்கிறோம். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்பித்து வருகிறோம். பிரெஞ்சு மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திணிக்கவில்லை..

ஆங்கிலத்தை பொறுத்தவரை தினமும் பள்ளி ஃபிரேயரில் நாங்கள் ஆங்கில வார்த்தை அர்த்தத்துடன் தினமும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அதில் புதிய வரிகளையும் உருவாக்கி தர சொல்லியிருக்கிறோம். அதேபோல் பள்ளி வகுப்பறையில் தினமும் ஆங்கில நியூஸ் பேப்பரை கொடுத்து உச்சரிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிவற்றை மாநகராட்சி சார்பில் செய்து வருகிறோம். அதேபோல் ஆங்கில வகுப்பின் போது, 10 நிமிடம் ஒவ்வொரு குழந்தையையும் ஆங்கிலத்தில் உரையாட வைக்கிறோம்

ஆங்கில உச்சரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடும். நாம் அமெரிக்காவில் உள்ளது போல் இங்லீஸ் பேச வேண்டும் என்று முயற்சிக்க முடியாது. அதேபோல் ஆங்கிலத்தில் நாம் பேசுவது அவர்களுக்கு புரிகிறதா, அதை நம்மிடம் திரும்புவும் ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார்களா.. என்பதை உறுதி செய்யும் தரமான கல்வியை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது” என்று மேயர் பிரியா பதிலளித்தார்.

மேலும் உங்களுக்காக...