அருகிலுள்ள நாடு (பாகிஸ்தான்) அமைதியாக ரொட்டி சாப்பிட்டு வாழ்க்கையை வாழுங்கள். இல்லையென்றால், எங்கள் புலிகளும் உங்களை இரையாக்க தயார் நிலையில் உள்ளன என பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றும்போது,
சுகமான, சமாதான வாழ்க்கையை வாழுங்கள், ரொட்டி சாப்பிடுங்கள், இல்லையென்றால் எங்கள் துப்பாக்கி உங்களுக்காக காத்திருக்கிறது.
தீவிரவாதத்தைத் தங்களுடைய நாட்டிலிருந்து நீக்க பாகிஸ்தானின் மக்கள் முன்வர வேண்டும். அந்த நாட்டின் இளைஞர்கள் முன்வரவேண்டும்.
நாங்கள் உங்களுக்கு கொடுத்த பதிலடி மிகவும் தீவிரமானது. அவர்களின் விமானத் தளங்கள் இன்றும் ‘ஐ.சி.யூ’வில் இருக்கின்றன. இந்திய இராணுவத்தின் வீரமும், துணிவும் காரணமாக பாகிஸ்தான் வெள்ளைக் கொடி காட்ட வேண்டிய நிலைக்கு வந்தது. அவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தோம். எங்களது இலக்கு உங்கள் தீவிரவாத முகாம்கள் தான், அமைதியாக இருந்திருந்தால் அமைதியாக வாழலாம்,ஆனால் தவறு செய்தீர்கள் என்றால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய நிலை வரும்’ என எச்சரித்தார்.