பாகிஸ்தானில் உள்ள யூடியூபருக்கு பேட்டி அளித்த போது, “எனது அத்தை வீடு இங்குதான் உள்ளது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரண்டு முறையாவது பாகிஸ்தானுக்கு வந்து விடுவேன். ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு வரும்போது, எனது சொந்த வீடு, சொந்த நாட்டிற்கு வருவது போல் உள்ளது” என்றும் கூறியுள்ளார். அந்த யூடியூபரின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து சலுகைகளையும் பெற்றவர் எதிரி நாடான பாகிஸ்தானை தனது சொந்த வீடு போல் கூறியிருப்பது மிகுந்த எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. 34 வயதான காசிம், மதப் பிரச்சாரம் செய்பவர் என்றும், அவர் தனது சகோதரர் மூலம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் இருவருமே பல ஆண்டுகளாக உளவு செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக அவ்வப்போது காசி மற்றும் அவரது சகோதரர் பணம் வாங்கியுள்ளனர் என்றும், வங்கி கணக்கின் ஆய்வு மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இருவரது மொபைல் போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் சில முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பிறந்து வளர்ந்து, பாகிஸ்தானுக்கு பணத்திற்காக உளவு சொல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்னும் பலர் பிடிபடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது