இனிமேல் பின்கோடு எண் தேவையில்லை.. வருகிறது DIGIPIN.. எப்படி பயன்படுத்துவது?

  இதுவரை நாம் பின்கோடு எண் பயன்படுத்தி வந்த நிலையில் இனிமேல் அதற்கு பதிலாக DIGIPIN என்ற எண் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. DIGIPIN என்பது நம் இருப்பிடத்தின் கோஆர்டிநேட்ஸ் அடிப்படையில் ஒரு டிஜிட்டல்…

digipin

 

இதுவரை நாம் பின்கோடு எண் பயன்படுத்தி வந்த நிலையில் இனிமேல் அதற்கு பதிலாக DIGIPIN என்ற எண் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIGIPIN என்பது நம் இருப்பிடத்தின் கோஆர்டிநேட்ஸ் அடிப்படையில் ஒரு டிஜிட்டல் பின் குறியீட்டை உருவாக்குகிறது. இதன் மூலம் சரியான முகவரிக்கு நமது கடிதங்கள், பார்சல்கள் செல்வதை உறுதி செய்கிறது.

இந்த நிலையில் DIGIPIN என்றால் என்ன? என்பதை இப்போது பார்ப்போம். இந்திய அஞ்சல் துறை இனி முழுக்க முழுக்க டிஜிட்டலுக்கு மாறுகிறது. இதற்காக ஒரு தனிப்பட்ட இணையதளத்தை தொடங்கியுள்ளது. இதில் பயனாளர்கள் தங்களுடைய வீடு அல்லது அலுவலகத்தின் முகவரிக்கான டிஜிட்டல் பின் குறியீட்டை உருவாக்கலாம்.

இந்த DigiPin என்பது 10 இலக்க, எழுத்துகளும் எண்ணுகளும் சேர்ந்த ஒரு தனிப்பட்ட குறியீடாகும். இது உங்கள் துல்லியமான இருப்பிட கோஆர்டிநேட்ஸில் இருந்து பெறப்படுகிறது.

தபால், கூரியர் டெலிவரிக்கு மட்டுமல்லாமல், அவசர சேவைகளுக்கும் DigiPin-ஐ பயன்படுத்தலாம். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு சேவைகள் போன்றவற்றுக்கு அழைக்கும்போது DigiPin-ஐ கொடுத்தால், அவர்கள் விரைவாக உங்கள் இடத்தை கண்டுபிடித்து உதவ முடியும்.

DIGIPIN எப்படி உருவாக்குவது? என்பதை இப்போது பார்ப்போம். இதற்கான வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளமான
https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற முகவரிக்கு சென்று அங்கு உங்கள் இருப்பிடத்தை அதாவது location access கொடுக்க அனுமதிக்க வேண்டும். உடனே உங்கள் துல்லியமான இடத்திலிருந்து DigiPin தானாக உருவாகிவிடும். இந்த குறியீட்டை நீங்கள் தபால், கூரியர் உள்பட அனைத்து அவசர சேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

இந்த DIGIPINஐ ஐ.ஐ.டி ஹைதராபாத், NRSC மற்றும் ISRO ஆகியவை இணைந்து உருவாக்கி தரும். இதன் மூலம் உங்கள் வீடு, அலுவலகம் அல்லது கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கான துல்லியமான PIN உருவாக்க முடிகிறது. ஒவ்வொரு DIGIPINக்கும் தனிப்பட்ட 10 எழுத்துகள் கொண்ட குறியீடு வழங்கப்படுகிறது.

தற்போது நாம் பயன்படுத்தி வரும் பின்கோடு என்பது ஒரு ஒட்டுமொத்த பகுதியை குறிக்கும். ஆனால் DIGIPIN சரியான நம் இருப்பிடத்தையே குறிக்கும். இதுதான் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். உதாரணமாக சென்னை தேனாம்பேட்டையில் நம் வீடு இருந்தால் அதற்கான பின்கோடு 600018 என்று குறிப்பிடுவோம், ஆனால் DIGIPIN-ல் தேனாம்பேட்டையில் உள்ள நம் வீட்டையை சரியாக குறிப்பிடும் வகையில் இருக்கும்.இதனால் இடம் கண்டுபிடிப்பது மிகவும் எளிதாகிறது.