இனிமேல் மெட்ரோ ரயிலின் கடைசி பெட்டி சரக்கு சேவைக்கு.. தெற்கு ஆசியாவில் இதுதான் முதல் முறை..!

மெட்ரோ ரயிலில் இதுவரை பயணிகள் மட்டுமே பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தெற்கு ஆசியாவில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சரக்கு சேவை தொடங்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மிகவும் வாகன…

delhi metro

மெட்ரோ ரயிலில் இதுவரை பயணிகள் மட்டுமே பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தெற்கு ஆசியாவில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சரக்கு சேவை தொடங்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மிகவும் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சரக்கு லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி நகருக்குள் வரும் சரக்குகளை டெலிவரி செய்ய மெட்ரோ ரயில்களை பயன்படுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல், ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, அதில் முழுவதுமாக சரக்குகள் சேவைக்காக ஒதுக்கப்படும். இதன் காரணமாக, சாலை போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், வாகன புகையால் ஏற்படும் மாசுபாடு கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில்கள் காலை 6 மணி முதல் தொடங்குவதால், சரக்கு போக்குவரத்து நெரிசலற்ற நேரங்களில் மட்டுமே செயல்படும். மற்ற நேரங்களில், அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் பயணம் செய்வார்கள் என டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

டெல்லி நகருக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை மெட்ரோ ரயில்கள் மூலம் மிக எளிதாகவும், விரைவாகவும் கொண்டு செல்லலாம். மேலும், சரக்கு சேவைக்கான கட்டணமும் மிகவும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், சென்னை உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டி சரக்கு சேவைக்காக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.