இன்ஸ்டாகிராம் டவுன்.. சமூக வலைத்தளங்களை குறி வைக்கிறார்களா ஹேக்கர்கள்?

சமூக வலைதளங்களுக்கு தற்போது சோதனையான காலம் என்று சொல்லலாம்.  சமீபத்தில், எலான் மஸ்க் அவர்களின் எக்ஸ்  என்ற சமூக வலைதளம் மிகப்பெரிய அளவில் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் சிக்கல்…

Instagram
சமூக வலைதளங்களுக்கு தற்போது சோதனையான காலம் என்று சொல்லலாம்.  சமீபத்தில், எலான் மஸ்க் அவர்களின் எக்ஸ்  என்ற சமூக வலைதளம் மிகப்பெரிய அளவில் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், இன்ஸ்டாகிராமில் நுழைய முடியவில்லை என்றும்,  லாகின் செய்யும் போது சிக்கல் ஏற்பட்டதாகவும் பல சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. டவுன் டிடெக்டர் ஆன்லைன் சேவை நிறுவனங்களில் இதுகுறித்து பல பதிவுகள் வெளியாகியுள்ளன.

69% பயனர்கள் லாகின் செய்ய முடியாமல் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பிரச்சனை மற்றும் பிற சில சிக்கல்களை சந்திப்பதாகவும், 400க்கும் அதிகமான புகார்கள் “டவுன் டிடெக்டர்”   இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து, பயனர்கள் தங்களது X தளத்திற்கு சென்று நகைச்சுவையுடன் மீம்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். “இன்ஸ்டாகிராம் செயல்படவில்லை என்றால் உடனே எக்ஸ்க்கு ஓடுகிறார்கள், இன்ஸ்டாகிராம் டவுன்!” என்று பதிவு செய்கிறார்கள். அதேபோல், “எக்ஸ் செயல்படவில்லை என்றால் உடனே இன்ஸ்டாகிராமுக்கு ஓடுகிறார்கள்!” என்று காமெடியாக பதிவுகள் பரவுகின்றன.

மெட்டா நிறுவனம் இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களான X மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து முடங்கி இருப்பது, பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.